பக்கம்:மதன கல்யாணி-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225

அவரவர் களுக்குக் குறித்துள்ள காலம் தவறாமல் அங்கங்கே போகும்படி யாக இருக்கும். அதற்கு நான் குந்தகம் செய்யக் கூடாதல்லவா?” என்று புன்சிரிப்போடு கூறினார். அதைக் கேட்ட துரைராஜா மிகுந்த விசனமடைந்தவன் போலக் காட்டிக் கொண்டு, “அடாடா! நேற்று அந்த டாக்டர் சொன்னதிலிருந்து மதன கோபாலன் இன்று நன்றாகத் தெளிவடைந்து விடுவான் என்றல்லவா நினைத்திருந்தேன். அவனுடைய நிலைமையைக் கேட்க, எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. ஆகா! என்னால் அந்த மனிதன் எப்படிப்பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஆளாகி விட்டான் அவனுடைய நண்பர்களான உங்களுக்கும் மற்றவர் களுக்கும் இதனால் எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டு விட்டன! அடாடா என்னுடைய ஆத்திரபுத்தியினாலும் மதியினத்தினாலும் மகாபாபகரமான காரியத்தையல்லவா செய்துவிட்டேன்! நீங்கள் ஒரு காரியம் செய்திருக்கலாமே; அவனுடைய உடம்பு ஸ்திதி இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்பதை ஒரு கடிதத்தில் எழுதி ஒர் ஆள் மூலமாக எனக்கு அனுப்பியிருந்தால் நானே அங்கே வந்து உங்களைப் பார்த்திருப்பதன்றி, நானும் அதன் விஷயத்தில் என்னாலான தேகப் பிரயாசையை எடுத்துக் கொண்டும் இருப்பேனே! இப்போதும், நான் அந்த மாதிரி செய்யத் தடை யில்லை. நாம் உடனே புறப்பட்டு அங்கேயே போய் விடுவோமே! என்று மிகுந்த அபிமானத்தோடு கூற, அதைக் கேட்ட செட்டியார், “ஆனால் அந்த டாக்டர் ஒரு சங்கதி சொல்லி இருக்கிறார். என்னையும் மதனகோபாலனுடைய தங்கையையும் தவிர, வேறே அன்னிய மனிதரை அவன் கண்டால், அவனுடைய மனம் சஞ்சலப்பட்டாலும், படலாம் என்றும், ஆகையால், அவன் அநேகமாகக் குணமடையும் வரையில், அன்னியர் அவனுக்கருகில் இருக்கவிட வேண்டாம் என்றும் அந்த டாக்டர் சொல்லி இருக்கிறார். அதைக் கருதியே நான் உங்களை அங்கே வரவழைக்க வில்லை; அதுவும் தவிர, நான் காலை முதல் இந்நேரம் வரையில், அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தது எனக்கும் அலுப்பாக இருந்தது. இப்படி வந்துவிட்டுத் திரும்பிப் போனால், மனசுக்கு ஒருவித உற்சாகம் ஏற்படும் என்ற எண்ணமும் என்னை இங்கே வரும்படி தூண்டியது. நான் கிழவனாக இருந்தாலும், எப்போதும் உல்லாச புருஷன். உங்களைப் போன்ற யெளவனப் புருஷர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/229&oldid=646049" இலிருந்து மீள்விக்கப்பட்டது