பக்கம்:மதன கல்யாணி-2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மதன கல்யாணி

ளோடு சேர்ந்து கொண்டு பலவகையில் புத்தியைச் செலுத்தி சந்தோஷமாக இருப்பதே எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஆகையால், நான் இப்போது அவசரப்பட்டுக் கொண்டு, நான் எதிர் பார்க்கும் சந்தோஷத்தை எல்லாம் கெடுத்துக் கொண்டு உடனே திரும்டி அங்கே போய்விட வேண்டும் என்று நான் விரும்பவில்லை” என்றார்.

அதைக் கேட்ட துரைராஜா, மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அடைந்தவனாய்ப் புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவரை நோக்கி, “நீங்கள் சொல்வதும் சரியான விஷயங்கள்தான். கஷ்டமும் சுகமும் மாறி மாறி இருந்தால்தான், எதிலும் அதிகமான சிரமம் தோன்றாது. நீங்கள் பேசியதில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம். அதை மாத்திரம் நீங்கள் தெரிவிக்க வேண்டும். மதனகோபால னுடைய தங்கை என்று குறிப்பிட்டீர்களே, அது நேற்று ராத்திரி மேன் மாடத்திலிருந்து அழுது கொண்டு வந்து அவனைக் கட்டிக் கொண்ட பெண்ணோ? அல்லது வேறோ?” என்றான்.

பசவண்ண செட்டியார், “அதே பெண்தான். அவன் அண்ணன். அந்தப் பெண் அவனுடைய தங்கை” என்றார்.

துரைராஜா:- அவர்களுடைய தாய்தகப்பன்மார் எங்கே இருக்கிறார்கள்?

செட்டியார்:- அவர்களுடைய தாய் தகப்பன்மார்கள் இன்னார் என்பது தெரியாது. அவர்கள் இருவரும் அநாதையாக அகப்பட்டு, உங்களுடைய பெரிய தகப்பனாரான என்னுடைய கூட்டாளியின் ஆதரவில் இருந்து வளர்ந்து வந்தார்கள்-என்றார்.

அதைக் கேட்ட துரைராஜா, மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தான். ஏனெனில், மோகனாங்கி ஒருகால் மதனகோ பாலனது மனைவியாகவோ, அல்லது வைப்பாட்டியாகவே இருப்பாளோ என்ற ஐயத்தை முதல் நாளிலிருந்து கொண்டிருந் தவன் ஆதலால், அவர்கள் இருவரும் சகோதரன் சகோதரிகள் என்ற செய்தியைக் கேட்கவே, அவனது மனம் கரைகடந்த குதுகலம் அடைந்து பொங்கியது. அவளை அடைவதற்கு இனி தான் முயற்சிக்கலாம் என்ற ஒரு பெருத்த நம்பிக்கையும் உண்டாகி விட்டது. தான் எப்பாடு பட்டாகிலும் செட்டியாரது நட்பை பலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/230&oldid=646053" இலிருந்து மீள்விக்கப்பட்டது