பக்கம்:மதன கல்யாணி-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மதன கல்யாணி

அனுபவிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதனாலே தான் நான் நேராக இங்கே வந்தேன். அதுவும் தவி, உங்களுடைய பங்களவை நான் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் தூண்டியது” என்றார்.

அதைக் கேட்ட துரைராஜா மிகுந்த குதுகலம் அடைந்தவனாய், “நான் இனிமேல் எப்போதும் உங்களுடன் கூடவே இருக்கிறேன்; என்னால் என்னென்ன காரியங்கள் ஆக வேண்டுமோ அவைகளை எல்லாம் நான் மிகுந்த சந்தோஷத்தோடு உடனே செய்து கொடுக்கிறேன். நீங்கள் இப்போது எங்கே ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய வர்த்தகத்தையும் ஜாகையையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது, அவைகள் தனித்தனியாக இருக்க வேண்டுமா? உங்களுக்கு வசதியான இடம் கிடைக்கிற வரையில் நீங்கள் இந்த பங்களாவிலேயே இருக்கலாம். உங்களுக்கு வேண்டிய சகலமான செளகரியங்களையும் நான் செய்து கொடுக்கிறேன்” என்றான்.

செட்டியார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தவர் போல நடித்து, “என்னுடைய நண்பரான வக்கீல் ஒருவர் இருக்கிறார். அவர் மூலமாக நான் தண்டையார் பேட்டையில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி விட்டேன். ஆள்கள் அதற்கு வெள்ளையடித் துக் கொண்டிருக்கிறார்கள். நாளைய தினம் அது தயாராகிவிடும். அதிலே தான் நான் என்னுடைய ஜாகையை வைத்துக் கொள்ளப் போகிறேன். வர்த்தகம் நடத்துவதற்குத் தேவையான இடமும் இரண்டொரு நாளில் அமர்ந்துவிடும். இடங்களைப் பற்றி இப்போது எனக்கு எவ்விதமான கவலையாவது அசெளகரிய மாவது இல்லை. இந்த மதனகோபாலனுடைய கவலை தான் பெரிதாக ஏற்பட்டுவிட்டது. அவன் நிரம்பவும் நல்ல பையன் கெட்டகுணம் என்பதையே அவன் அறியாதவன். எல்லோரும் புகழும்படியான மாசற்ற நடத்தை உடையவன். அவனுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிணி நீங்கி, அவன் பிழைக்க வேண்டுமே என்ற கவலை தான் இப்போது என்னுடைய மனசை எல்லாம் கவர்ந்து கொண்டது. நல்ல மனிதர்களுக்குத் தான் துன்பமெல்லாம் வருகிறது; அவன் அன்னியப் பெண்பிள்ளைகளைக் கண்டால், அஞ்சிப் பயந்து ஐந்து காதவழி தூரம் ஒடக்கூடியவன். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/234&oldid=646060" இலிருந்து மீள்விக்கப்பட்டது