பக்கம்:மதன கல்யாணி-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23i

மேல் சில தினங்களுக்கு முன்னால், ஒரு பெருத்த அவதூறு ஏற்பட்டது. அதனால் அவனுடைய பிழைப்பே கெட்டுப் போய் விட்டது. அவன் வீணை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த இடங்களிலெல்லாம், அவனை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். உத்தியோகம் போனால் போகிறது.வேறே இடத் துக்குப் போய் ஆயிரம் உத்தியோகங்கள் சம்பாதித்துக் கொள்ள லாம் என்றால், இப்போது உயிரே போகும்படியான பெரிய விபத்து நேர்ந்து விட்டது. அவனுக்கு இது மிகவும் பொல்லாத காலம் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. அவனையும், அவனுடைய தங்கையையும் தமது சொந்தக் குழந்தைகள் போல, அதிக வாத்சல்யத்தோடு வளர்த்தவரான உங்களுடைய பெரிய தகப்பனார், அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இரண்டு பொல்லாங்கு களைப் பற்றியும் கேள்விப்படுவாரானால், அவர்கள் ஆராத் துயரத்திலாழ்வதன்றி உடனே புறப்பட்டு இங்கே ஒடிவந்து விடுவார்கள்” என்று மிகுந்த விசனத்தோடு கூறினார்.

அதைக் கேட்ட துரைராஜா தான் ம காபாலனது நட்பையும் பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்வதற்கு அதுவே தக்க மார்க்கம் என்று தீர்மானித்துக் கொண்டவனாய் அவரை நோக்கி, “மெய்தான்; நான்கூட, சில தினங்களுக்கு முன் வரையில், மதன கோபாலன் கெட்ட நடத்தை உள்ளவன் என்று நினைத்திருந்தேன். நேற்று சாயுங்காலம் தாங்கள் அவனைப்பற்றிப் பேசிய பிறகும், இன்று காலையில் நடந்த இன்னொரு முக்கியமான சம்பவத்தின் பிறகும் நான் அந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டேன். இருந்தாலும், என்னுடைய தங்கை அவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆவல் மாத்திரம் இருந்து கொண்டிருக்கிறது; அந்தச் சந்தேகமும் நிவர்த்தியாகி விட்டால், நான் அவனைப் புருஷ உத்தமனென்றே மதிப்பதன்றி, அவனுக்கு அவசியமாகத் தெரிய வேண்டிய வேறே சில ரகசிய விஷயங் களையும் உடனே வெளியிடுவேன். அவைகளைக் கொண்டு, அவனுக்கு ஏற்பட்டுள்ள அவதுறை விலக்கிக் கொள்ளலாம்” என்றான். -

அதைக் கேட்ட செட்டியார், “அப்படியா அந்தக் கடிதத்தையும் இதோ கொண்டு வந்திருக்கிறேன். பாருங்கள், அந்தச் சந்தேகமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/235&oldid=646062" இலிருந்து மீள்விக்கப்பட்டது