பக்கம்:மதன கல்யாணி-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மதன கல்யாணி

விஷயத்தில் கல்யாணியம்மாள் சொன்ன அவதூறைக் கேட், உங்களுடைய தங்கைக்கு சகிக்க முடியாத துன்பமும் துயரமும் ஏற்பட்டதாம். தான் இறந்து போவதற்குள், அந்த அவதூறு உண்மையானதா அல்லவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒர் அவாவினால், அவனைக் கண்டு பேசும் பொருட்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டதாம். அதைத் தவிர வேறொரு ரகசியமும் இல்லையாம்” என்றார்.

அதைக் கேட்டதுரைராஜா ஒருவாறு விசனமடைந்து, “அப்படியா சங்கதி! நல்ல காலந்தான் இந்த நிச்சயதார்த்தம் நின்றது! இல்லை யானால், என்னுடைய தங்கை இந்நேரம் இறந்து போயிருப்பாள்; இந்த விவரங்களையும், மைனருக்கு இவளைக் கட்டிக் கொடுக்கக் கூடாது என்று என்னுடைய பெரிய தகப்பனார் எழுதி இருப் பதையும் நான் உடனே அத்தையம்மாளிடத்தில் தெரிவித்து அந்த நினைவை மாற்றிவிடச் சொல்லுகிறேன். நமக்கு அனுகூலமாக, அந்த மைனரும் பாலாம்பாள் என்ற ஒரு தேவடியாளிடத்தில் பலமாக மாட்டிக் கொண்டு அவளுக்கு மகா விபரீதமான ஒரு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறான். அந்தப் பத்திரத்தில் கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும் சாகூஜிகளாகக் கையெழுத்துச் செய்திருக்கிறார்களாம்!” என்று கூறிய வண்ணம், மைனர் மோகனாங்கியைத் தேடிப் போனது முதல், அவன் பாலாம்பாளினது நட்பைப் பெற்று, அவளது மோக வலையில் வீழ்ந்து அவளோடு மைலாப்பூரிலிருப்பது வரையில் உள்ள சகலமான விவரங்களையும், கல்யாணியம்மாளும், சிவஞான முதலியாரும் ஆலந்துருக்குப் போய் வந்த விவரங்களையும் விரிவாக எடுத்துக் கூறியபின், மேலும் பேசத் தொடங்கி, “அப்படியானால், கல்யாணியம்மாள் மதனகோபாலனைப் பற்றிச் சொன்ன வரலாறு சுத்தக் கட்டுப்பாடுதான் போலிருக்கிறது! அங்கே உண்மையில் என்னதான் நடந்ததாம்?” என்றான்.

அவன் சொன்ன வரலாறுகளை எல்லாம் நிரம்பவும் கவனமாக வும், ஆவலாகவும் கடைசிவரையில் கேட்டு வந்த செட்டியார் அவனை நோக்கி, மதனகோபாலனும் கண்மணியம்மாளும் சில தினங்களுக்கு முன் சம்பாஷித்திருந்த போது மீனாகூஜியம்மாளும் துரைராஜாவும் திடீரென்று வந்து அவனைக் கண்டித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/238&oldid=646067" இலிருந்து மீள்விக்கப்பட்டது