பக்கம்:மதன கல்யாணி-2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மதன கல்யாணி

கடிதங்களையும் படித்து, அவன் சொன்ன வரலாறுகளையும் கேட்கவே, மிகுந்த வியப்பும், திக் பிரமையும், ஒருவித மகிழ்ச்சியும் அடைந்தவராய், சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து மெளனமாக இருந்தபின், என்ன ஆச்சரியம் ஒரு பெண்பிள்ளை எப்படிப்பட்ட தந்திரம் செய்திருக்கிறாள் பார்த்தீர்களா அவள் தன்னுடைய கருத்தை மகா யூகமாக முடித்துக் கொண்டதுமன்றி உங்களையும் ஏமாற்றிவிட்டாள் அல்லவா! அவள் மதனகோபாலன் விஷயத்தில் பெருத்த பெருத்த தீம்புகள் செய்து அவனுடைய உயிருக்கே ஹானி தேடியதோடு, உங்களையும் ஏமாற்றி மகா அக்கிரமமான காரியம் செய்திருக்கிறாள். ஆகையால் நாம் இந்த விஷயத்தை இவ்வளவோடு சும்மா விட்டுவிடக் கூடாதென்று நினைக்கிறேன். நீங்கள் மாத்திரம் நான் சொல்வது போல நடந்து எங்களுக்கு அனுசரணையாக இருப்பதானால் நான் அந்தக் கல்யாணியம்மாளுடைய கண்ணில் விரல் கொடுத்து ஆட்டி விடுவேன்; அதுவும் தவிர, ஊரார் எல்லோரும் ஏளனம் பண்ணி சிரிக்கும் படியாகவும் செய்துவிடுவேன். நாம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையில், அவள் பொறியிலகப்பட்ட எலி போல விழித்துத் திக்குமுக்காடிப் போக வேண்டும்’ என்றார்.

அதைக் கேட்ட துரைராஜா, “இனி நான் உங்களுடைய மனிதன், நீங்கள் எப்படி நடந்து கொள்ளச் சொல்லுகிறீர்களோ அப்படி நடந்து கொள்ள நான் சித்தமாக இருக்கிறேன். அவளுடைய இறுமாப்பையும் கோட்டத்தையும் எப்படியாவது நீங்கள் அடக்கி மட்டந் தட்டினால், என் மனம் குளிரும். ஆனால், நான் சுட்ட விஷயத்தில், மதனகோபாலனும் நீங்களும் மற்றவரும் என் மேல் வருத்தம் பாராட்டாமல், அதை மறந்து என்னை மன்னித்துவிட வேண்டும். நீங்கள் கல்யாணியம்மாள் பேரில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையில் எனக்கு எவ்விதக் கெடுதலும் உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றான். உடனே பசவண்ண செட்டியார், “சரி, அப்படியே நடந்து கொள்வோம். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். மதனகோபாலனை நீங்கள் சுட்ட விஷயத்தில் கழிவிரக்கமும் விசனமும் கொண்டு, நீங்களாகவே அவனுக்கு எழுதுவது போல ஒரு கடிதம் எழுதி அதை என்னிடத்தில் கொடுங்கள். துரையம்மாள் என்று கையெழுத்துச் செய்யப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/240&oldid=646072" இலிருந்து மீள்விக்கப்பட்டது