பக்கம்:மதன கல்யாணி-2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மதன கல்யாணி

உடனே துரைராஜா, “பேஷ்! சரியான பேச்சு நான் பிடிக்கிற வர்களெல்லாம் பதினெட்டு வயசுக்கு மேற்படாமலே இருப் பார்கள்; அவர்கள் மாத்திரம் சிறு பெண்ணாக இருக்க வேண்டும் என்கிறீர் களே, நீங்களும் சிறுபிள்ளையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டால் அதற்கென்ன செய்கிறது?” என்று புரளியாக நகைத்த வண்ணம் வினவினான்.

அதைக் கேட்ட செட்டியார் விசனமடைந்தவர் போலக் காட்டிக் கொள்ளாமல் நிதானமாகப் பேசத் தொடங்கி, “என்னைப் பார்த்தால் அவ்வளவு வயசான கிழவனாகவா இருக்கிறது? எனக்கு இப்போது வயசு முப்பத்தைந்து தானே ஆகிறது. நான் சமீப காலத்தில் பிரமாதமான வியாதியில் பட்டு எழுந்தேன். அதனால், என்னுடைய தோற்றம் கிழத்தோற்றமாக மாறி இருக்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார்.

துரைராஜா சந்தோஷமாக நகைத்து, “அப்படியானால், சரி தான். நல்ல பதினாறு வயசுக் குமரிகளாகப் பார்த்து, வலது பக்கத்துக்கு இரண்டு பேரும் இடது பக்கத்துக்கு இரண்டு பேரும் அமர்த்தினால் உங்களுக்குப் போதுமல்லவா?” என்றான்.

செட்டியார் ஆனந்தபரவசம் அடைந்தவராய், “ஓ! போதும் போதும்! நான் தான் இந்த விஷயங்களில் நிரம்பவும் பழகினவன் என்று இதுவரையில் எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்கள் இவ்வளவு அதிபாலியத்திலேயே என்னைவிட அசாத்தியமாகப் பழகியிருக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது வயசு எவ்வளவு ஆகிறது?” என்றார்.

துரைராஜா, “எனக்கு இருபத்து மூன்றாவது வயசு ஆரம்ப மாகிறது” என்றான்.

செட்டியார்:- உங்களுக்கு இன்னமும் கலியாணம் ஆக வில்லையா?

துரைராஜா:- இல்லை. அந்தக் கால்கட்டு எதற்காக? கலியாணம் செய்து கொண்டவனுக்கு ஒரு பெண்டாட்டி; செய்து கொள்ளாத வனுக்கு ஊரெல்லாம் பெண்டாட்டிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/244&oldid=646079" இலிருந்து மீள்விக்கப்பட்டது