பக்கம்:மதன கல்யாணி-2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மதன கல்யாணி

அப்போது செட்டியார் துரைராஜாவை நோக்கி, “சரி; இனிமேல் நீங்கள் பணத்துக்காக இவ்வளவு பாடுபடத் தேவையில்லை. உங்களுக்கு எந்த நிமிஷத்தில் எவ்வளவு பணம் தேவையானாலும் அதை நான் உடனே கொடுத்து உதவுகிறேன். இப்போது ஐயாயிரமல்லவா தேவை என்கிறீர்கள்; நான் வீட்டுக்குப் போனவுடனே பதினாயிரம் ரூபாய் அனுப்புகிறேன். இஷ்டம் போலச் செலவு செய்து கொள்ளுங்கள்; எனக்கு நேரமாகிறது. நாம் மறுபடியும் நாளைய சாயுங்காலம் என்னுடைய பங்களாவில் சந்திக்கலாம். மிகுதி விஷயங்களை எல்லாம் நாம் அங்கேயே பேசிக்கொள்வோம். உங்களுடைய கடிதங்களைப் பார்த்ததி லிருந்தும், உங்களோடு சம்பாவித்ததிலிருந்தும், உங்களுடைய மனசில் ஒர் ஆசை இருந்து வருவதாகத் தெரிகிறது. மதன கோபாலனுடைய தங்கையான மோகனாங்கியை அடைய வேண்டும் என்று நீங்கள் நிரம்பவும் பிரியப்பட்டு அந்த விஷயத்தில் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பெண் இதுவரையில் நாடகத்தில் சேர்ந்து நடித்து வந்தாள் ஆனாலும் சகலவிதமான நற்குணங்களும், நன்னடத்தையும் வாய்ந்தவள் என்று என்னுடைய கூட்டாளி யான உங்கள் பெரிய தகப்பனார் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். எத்தனையோ மகாராஜாக்கள் எல்லோரும் அவளை அடைய வேண்டும் என்று முயற்சித்தார்கள். அவளுடைய விருப்பம் எவரிடத்திலும் செல்லவில்லை. அவள் நாடகத்தில் இருப்பதால், அவளைக் கண்ட ஆண்மக்கள் யாவரும், அவளிடத்தில் துர்மோகங் கொண்டு கெட்டழிந்து போகிறார்கள் ஆகையால், அவளை நாடகத்துக்கு அனுப்பாமல் வைத்துக் கொள்வதே உசிதமானதென்று மதனகோபாலன் சில தினங்களுக்கு முன் என்னுடைய கூட்டாளிக்கு எழுதினான். அவர்களும் அதற்கு இணங்கி, இனி அவளை வெளியிலேயே அனுப்ப வேண்டாம் என்று கண்டித்து எழுதிவிட்டார்கள். ஆகையால், எப்படிப்பட்ட வரும் இனி அவளிடத்தில் நெருங்குவதே முடியாத காரியம். நீங்கள் மதனகோபாலனைச் சுட்ட விஷயத்தில் இப்போது அவர்களுக்கு உங்கள் மேல் அருவருப்பு உண்டாயிருக்கிறது; ஆகையால் நான் முதலில் அவர்களிடத்தில் உங்களுடைய நற்குணங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி மனசை மாற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/248&oldid=646086" இலிருந்து மீள்விக்கப்பட்டது