பக்கம்:மதன கல்யாணி-2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245

முயலுகிறேன். இந்தக் கல்யாணியம்மாளுடைய விஷயத்தில் நீங்கள் கடைசி வரையில் உறுதியாக இருந்து, நம்முடைய வழக்கு இதயமாவதற்கு உதவி செய்தால், மோகனாங்கியின் பிரியம் உங்கள் மேல் ஏற்படும். அதன் பிறகு உங்கள் இருவருக்கும் நான் பழக்கம் செய்து வைக்கிறேன். அப்புறம் எல்லாம் உங்களுடைய சாமர்த்தியத்தைப் பொருத்தது” என்றார்.

எதிர்பாராத அந்த சந்தோஷ சங்கதியைக் கேட்ட , கரைகடந்த களிப்படைந்து பூரித்தவனாய் நன்றியறிவும், புன்னகையும் தவழ்ந்த முகத்தோடு செட்டியாரைப் பார்த்து, “அந்த தெய்வந்தான் எனக்கு உதவி செய்ய நினைத்து உங்கள் ரூபமாக வந்திருக்கிறது! என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு அபாரமான பிரியத்துக்குப் பதிலாக நான் உங்களுக்கு என்ன தான் செய்யப் போகிறேன்! நீங்கள், ஒருவனைக் கொன்றுவிட்டு வா என்றால், அதே நொடியில் அப்படியே செய்வேன்; ஒருவனுடைய பெண்ஜாதியைத் துக்கிக் கொண்டு வா என்றால், நீங்கள் சொல்லி வாய் மூடும் முன் அப்படியே செய்வேன். இன்னம் செய்யத்தகாத வேறே எந்தக் காரியத்தை நீங்கள் செய்யச் சொன்னாலும் நான் உடனே செய்து முடிப்பேன்; இதை நீங்கள் பிரமாணமாக எண்ணிக் கொள்ளலாம்” என்று உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினான்.

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் அளவிலடங்கா மகிழ்ச்சி அடைந்தவர் போல நடித்து, “சிநேகிதர் இருந்தாலும் இப்படி யல்லவா இருக்க வேண்டும்! இவ்வளவு அருமையான குணங்கள் வாய்ந்த சிநேகிதர் இருக்கையில் இனி எனக்கு என்ன குறை ஏற்படப் போகிறது! ஏதோ என்னுடைய நல்ல அதிர்ஷ்டத்தினாலே தான் நான் உங்களுக்கு நண்பனானேன்; எனக்கு நேரமாகிறது; நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். ஜாகைக்குப் போன வுடனே பணத்தை அனுப்பி வைக்கிறேன். நாளைய தினம் ராத்திரி நீங்கள் தவறாமல் உங்களுடைய நண்பர்களை அழைத்து வந்து எனக்குப் பழக்கம் செய்து வைக்க மற்ந்து விடாதீர்கள்” என்று கூறி வெள்ளைக்கார உடைகள் அடங்கிய மூட்டையைக் கையில் எடுத்துக் கொண்ட வண்ணம் எழுந்தார். உடனே துரைராஜா அவ்வாறே செய்வதாக உறுதி கூறி அவரையும் அழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/249&oldid=646088" இலிருந்து மீள்விக்கப்பட்டது