பக்கம்:மதன கல்யாணி-2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 247 -

தயாரித்து, அதற்கடியில் கையெழுத்துச் செய்து உறைக்குள் போட்டு, தபாற்சாலைக்குப் போய் தபால் தலைகள் ஒட்டி ரிஜிஸ்டர் செய்துவிடும்படி, செட்டியாரிடத்தில் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்ட செட்டியார் நேராக அந்த ஊர்த் தபாற்சாலைக்குப் போய் அதை ரிஜிஸ்டர் செய்தனுப்பி விட்டு, வக்கீல் சிவஞான முதலியாரது ஜாகையை நோக்கிச் சென்றார்.


25-வது அதிகாரம் ஓயாத் துன்பம் ஒழியா வேதனை

துரைரராஜா கல்யாணியம்மாளது அந்தப்புரத்திற்கு வந்து சம்பாவித்துக் கொண்டிருந்துவிட்டுப் போன அந்த அரை நாழிகைக்குள், அந்த அம்மாளது உடம்பு வியர்த்து விருவிருத்துத் தள்ளாடிப் போய்விட்டது. மனதோ சகிக்க இயலாவிதம் வதைபட்டுப் போய்விட்டது. அந்த சம்பாஷணையைத் தடுக்கவும் மாட்டாமல் பொறுக்கவும் மாட்டாமல் திரிசங்கு சுவர்க்கத்தில் இருப்பவள் போல இருந்த கல்யாணியம்மாள், அவன் வெளியிற் போனவுடனே, ஒரு சாய்மான நாற்காலியண்டை போய், “உஸ் அப்பாடா” என்று ஒய்ந்து அதன் மேல் விழுந்தாள். அந்தச் சீமாட்டியின் மனம், எண்ணிறந்த துன்பங்களால், பெருத்த புண் போல உளைவுற்றிருந்தமையால், அவளுக்கு நேரும் ஒவ்வொரு புதிய வேதனையையும் தாள மாட்டாமல், கல்யாணியம்மாள் நரகவேதனை அடைந்ததன்றி, அவளது உயிரிதும் பெரும் பாகம் உடம்பை விட்டுப் போய் விட்டது போலவும் இருந்தது.

முதல் நாள் முழுதும் அந்தச் சீமாட்டி மைனரது பத்திர விஷயத்தைப் பற்றியும், துரைஸானியம்மாள் மோகனரங்கனிடத் தில் நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றியும் சிந்தனை செய்து விசனித்து வருந்தி, அவற்றிற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்து, பெருத்த வேதனைக் கடலில் ஆழ்ந்து கிடந்தவள் அல்லவா. துரைஸ்ானியம்மாளை அன்றிரவில் அறைக்குள் வைத்துப் பூட்டியப்பின், கோமளவல்லியை அழைத்துத் தனது அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/251&oldid=646094" இலிருந்து மீள்விக்கப்பட்டது