பக்கம்:மதன கல்யாணி-2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 255

போஜன அறைக்குப் போய் ஏதோ சொற்ப ஆகாரம் பார்த்துக் கொண்டு, நேராக துரைஸானியம்மாளது அந்தப்புரத் திற்குப் போய், அவளது உடம்பின் நிலைமையைப் பற்றி விசாரித்த பின் அவ்விடத்தை விட்டுத் தனது அந்தப்புரம் போய்ச் சேர்ந்தாள்.

அப்போது மணி எட்டரை ஆகியிருந்தது. பொன்னம்மாள் ஆலந்துரிலிருந்து திரும்பி வந்திருந்தால், எப்படியும் உடனே வந்து தன்னைப் பார்த்து விவரத்தைச் சொல்லியிருப்பாள் என்ற எண்ணத்தினால், அவள் வரவில்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு அதே கவலையாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாழிகை ஏற ஏற அவளது கவலையும் ஆவலும் பெருகின. அவளது மனம் வேறு எந்த விஷயத்திலும் செல்லாமல் அதே தியானமாக இருந்து வேதனை அடைந்திருந்தது. கருப்பாயி எப்படியும் அன்றிரவிற்குள் வருவாள் என்ற நம்பிக்கை இருந்த தாகையால், எந்நேரமானாலும் தான் உட்கார்ந்திருந்து அதன் முடிவை அறிந்து, தனது மனதை சமாதானப் படுத்திக் கொண்ட பிறகே, தான் படுக்க வேண்டும் என்ற நினைவினால் தூண்டப் பட்டவளாய் கல்யாணியம்மாள் கதவுகளைத் தாளிடாமல் வெறுமையாக மூடிவைத்து விட்டு, பணிப் பெண்ணையும் வெளியில் படுத்திருக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டு நாற்காலி யில் சாய்ந்த வண்ணம் தபசு பண்ணிக் கொண்டிருந்தாள்.

நடுநிசி வேளையும் கழிந்தது. கடிகாரம் ஒரு மணி அடித்தது. அப்போது கதவை மெதுவாகத் திறந்து கொண்டு பொன்னம்மாள் உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னாக, கருப்பாயியும், கட்டையன் குறவனும் தொடர்ந்து வந்தார்கள். மூவரும் உள்ளே வந்தவுடனே பொன்னம்மாள் கதவுகளை எல்லாம் உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு வந்தாள். உணர்வோ, அல்லது, நித்திரையோ என்ற சந்தேகமான நிலைமையில் ஓய்ந்து சாய்ந்திருந்த கல்யாணி யம்மாள் ஒரு நிமிஷ நேரம் வரையில் அப்படியே இருந்து சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்து தனது கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு அவர்கள் மூவரையும் உற்று நோக்கினாள். அந்த அம்மாள் கட்டையன் குறவனைப் பார்த்தது. அதுவே முதல் தடவை ஆகையால், மதுரை வீரனைப் போலக் கருத்த பயங்கர

மான தோற்றத்தோடு ஆஜானுபாகுவாகக் காணப்பட்ட அந்த

மு.க.11-17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/259&oldid=646109" இலிருந்து மீள்விக்கப்பட்டது