பக்கம்:மதன கல்யாணி-2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மதன கல்யாணி

கட்டெயன் கொறவன் சங்கதியை அறிஞ்சுக்கினான். ‘மைனரும் அந்தப் பொம்புள்ளெயும் நம்பளெயெல்லாம் ஏமாத்திட்டாங்க பாத்தியா அவளெ உட்டேனா பாரு இந்தப் பத்தரத்தெ இஸ்தி ஆபீசுலே பதிஞ்சுட்டாப்பிலே, ஆயிப்போச்சா. அந்தப் பொம்புள்ளேயக் கொண்டு போயி, அவ மைனரோடே இனிமே ஒரு நாளும் இருக்க முடியாமெ அடிச்சுப்புட்றேன். அதுக்கு மேலே, இந்தப் பத்தரத்தெ வச்சுக்கினு யாரு என்ன செய்ய முடியும்” இன்னு அந்தக் கொறவன் சொன்னான். அது எனக்கும் கருப்பாயிக்கும் நல்ல காரியமா இருந்திச்சு; அப்பிடியே செய்யச் சொல்லிப்புட்டோம்; அப்புறம் ஒரு நாளி நேரம் வரெயிலே, அவுங்க காத்திருந்தாங்க. நீங்க கண்ணெத் தொறக்கவே இல்லெ; நானும் கருப்பாயியும் சேர்ந்து ஒங்களைத் தூக்கிக் கட்டுலு மேலே படுக்க வச்சோம். நீங்க அசந்து மூச்சுப் பேச்சில்லாமெக் கெடந்தீங்க. அந்த சமயத்துலே யாராச்சும் வந்தாக்கா, அவுங்க ரெண்டு பேரையும் பார்த்துடப் போறாங்களேயின்னு, நான் அவுங்க ரெண்டு பேரையும் போவச் சொல்லிப்புட்டேன். அதுக்குப் பொறவாலே நீங்க இப்பதான் கண்னெத் தொறந்தீங்க” என்றாள். அந்த வரலாற்றைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த அச்சமும் கவலையும் அடைந்து, “ஏதேது! நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை சந்தியில் இழுத்துவிட்டு அநர்த்தத்தில் கொண்டு போய் விடுவீர்கள் போலிருக்கிறதே! நாம் இவர்களை விட்டுப் பத்திரத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டுவரச் சொன்னோம் என்ற சங்கதி நேற்றைய காலையிலேயே மைனருக்குத் தெரிந்து, நம்முடைய எண்ணம் பலியாதபடி அடித்து விடுவதாக, அவன் துரைராஜாவுக்குக் கடிதம் எழுதி இருந்தான். அந்தப்படி அவன் நேற்றைய தினமே பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொண்டிருந்து, நம்முடைய எண்ணம் நிறைவேறாதபடி செய்துவிட்டான். இந்தக் கட்டையன் குறவனும் கருப்பாயியும் நேற்று ராத்திரி அவர்களைக் கட்டிப் போட்டுப் பல வகையான உடத்திரவங்களை செய்திருக்கிறார்கள்; நம்முடைய அம்மாளே இந்த ஆள்களை விட்டு இவ்வளவு தூரம் செய்யும்படி தூண்டினார்கள் அல்லவா என்ற ஆத்திரமும் கோபமும் மைனருக்கு இருக்கும். அவனோ மகா துஷ்டன்; அவன் நேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/264&oldid=646119" இலிருந்து மீள்விக்கப்பட்டது