பக்கம்:மதன கல்யாணி-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265

இந்தக் காரியம் நடக்க விருப்பமா என்பதை உடனே ஒரு கடிதத்தில் எழுதி, நாளை சாயுங்காலம் சரியாக ஆறு மணிக்கு உங்களுடைய பங்களாவின் வாசலில் உள்ள தபாற்பெட்டி யண்டையில் வந்து நிற்கும் மனிதரிடத்தில் கொடுத்தனுப்பினால், காரியம் அதன்படி நிறைவேறும் கடிதம் கொடுக்காவிட்டால், நீங்கள் கலியாணத்திற்கு வர விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு தங்கள் விதேயன்,

நrத்திரத்தரகன்.

- என்று எழுதப்பட்டிருந்த விந்தையான கடிதத்தைப் படித்த வுடனே கல்யாணியம்மாள், பொன்னம்மாள் ஆகிய இருவரது முகங்களும், சடக்கென்று மாறுபட்டன. சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் அடைந்திருந்த களிப்பும், மகிழ்ச்சியும் போன இடம் தெரியாதபடி மறைந்து போயின. மறுபடியும் கலக்கமும், குழப்பமும், திகைப்பும், பிரமிப்பும், பெருந்திகிலும் எழுந்து கல்யாணியம்மாளது மனதை வளைத்துக் கொண்டன. அந்தக் கடிதம் உண்மையான கருத்தோடு எழுதப்பட்டதாக இருக்குமா, அல்லது, தங்களைப் புரளி செய்யும் பொருட்டு எழுதப்பட்ட பொய்க் கடிதமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதை ஒரு பெருத்த விபத்தாக நினைப்பதா, அல்லது, அதை அலட்சிய மாக மதிப்பதா என்ற நினைவைக் கொண்டவளாய், கல்யாணி யம்மாள் அரை நாழிகை நேரம் வரையில் மெளனமாக இருந்து, கடைசியாக நிமிர்ந்து பொன்னம்மாளது முகத்தை நோக்கி, “என்னடீ இது துரைஸானியம்மாளுடைய காரியம் அதிசீக்கிரத் தில் ஒழுங்குப்பட்டு விடும் என்று நினைத்து மனக்கோட்டை கட்டி நாம் சந்தோஷப்பட்டதென்ன!. இப்போது கிடைத்திருக்கும் சங்கதி என்ன ராமலிங்கபுரத்தாருடைய கடிதம் வராமல் இருந்ததைப் பற்றி எனக்கு அவ்வளவு கவலை உண்டாகவில்லை. அவர் களுடைய கடிதம் இன்றைக்கு வராவிட்டால், இன்னம் இரண்டொரு நாளில் எப்படியும் வந்து சேரும். நம்முடைய சம்பந்தமும் கிடைக்குமா என்று மிகுந்த ஆவலோடு அவர்கள் காத்திருக்கிறபடியால் அவர்கள் ஒருகால் நேரிலேயே மனிதரை அனுப்பினாலும் அனுப்பலாம். ஆகையால், அதைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/269&oldid=646128" இலிருந்து மீள்விக்கப்பட்டது