பக்கம்:மதன கல்யாணி-2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மதன கல்யாணி

எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை. அதற்குள், இந்தத் தொந்தரவு ஒன்று புதிதாகக் கிளம்பி இருக்கிறதே. காரியம் இப்படி நேரும் என்று நான் சொப்பனத்தில்கூட நினைக்கவில்லையே. இந்த மோகனரங்கன் செங்கல்பட்டுக்குப் போகாமல் வழியிலேயே இறங்கித் திரும்பி வந்திருக்கலாம். அதைப் பற்றி சந்தேகமில்லை. ஆனால், இவ்வளவு துணிகரமாகக் கடிதம் எழுத அவனுக்கு அவ்வளவு யோக்கியதை எப்படி உண்டாயிற்று! வக்கீல் அவனை இங்கே கொண்டு வந்து வேலைக்கு வைத்த போது அவன் யாருமற்ற அநாதைப் பையன் என்றல்லவா சொன்னார். இவ்வளவு பெரிய பட்டணத்தில் இப்படி முன்னாகவே அறிவித்துவிட்டு வந்து பெண்ணைக் கொண்டு போவது சுலபமான காரியமா? அதற்கு ஏராளமான ஆள்கள் இருக்க வேண்டாமா? அவர்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைக்க வேண்டாமா? இந்த அநாதைப் பையனுக்குத் திடீரென்று அவ்வளவு பணமும் ஜனக்கட்டும் எப்படி உண்டாயிருக்கும்! இது நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறதே என்றாள்.

பொன்னம்மாள் சிறிது நேரம் யோசனை செய்து, “அந்த அண்ணாடங்காச்சிப் பையனாவது இப்படி எழுதவாவது! அடிச்சாக்கூட அவுனுக்கு சரியா அளத்தெரியாதே. அவன் எளுதிப் போட்டிருப்பான். இந்தக் கடுதாசியினாலெ ஒரு கொசுவுகூட சாகப் போறதில்லெ கிளிச்சிக் குப்பையிலே போடுங்க. இதுக்கெல்லாமா நாம் பயந்துக்கறது?” என்றாள்.

கல்யாணியம்மாள் கால் நாழிகை நேரம் வரையில் சிந்தனை செய்து, “அவன் எழுதக்கூடியவன்தான். ஆனால் மோகனரங்க னுக்கும் துரைஸானியம்மாளுக்கும் சிநேகம் என்பதும், நாம் அவனைச் செங்கல்பட்டுக்கு அனுப்பியதும், துரைராஜாவுக்குத் தெரியவே வகையில்லையே?” என்றாள்.

பொன்னம்மாள், “நீங்க என்னெ ஆலந்துருக்கு அனுப்பிச்சதும் கருப்பாயி இஞ்சே வந்ததும் எப்பிடி அவர்களுக்குத் தெரிஞ்சிச்சோ, அதெப்போலெதான் இதுவும் தெரிஞ்சிருக்கும். நம்ப வங்களாவுலெ ஆரோ ஒரு உள்ளாளு இருந்தே, இப்பிடி எல்லாம் காரியம் நடக்குது. அதெத்தான் நாம்ப மின்னாலே கண்டு பிடிக்கணும். இந்தக் கடுதாசியிலே எளுதியிருக்கிறபடி காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/270&oldid=646132" இலிருந்து மீள்விக்கப்பட்டது