பக்கம்:மதன கல்யாணி-2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275

கவனிக்காமல் கொஞ்ச காலம் இருந்து ஒரு புருஷனைக் கட்டிக் கொண்டு இவர்களை விட்டு விலகிப் போய்விட வேண்டும். அப்படிச் செய்யாமல், ஏதோ வெளித்தோற்றமான சில சம்சயங் களை வைத்துக் கொண்டு அம்மாளைப் பற்றி நிரம்பவும் கேவல மான அபிப்பிராயத்தைக் கொண்டாய். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, உடனே நீயும் ஒருவனிடத்தில் கள்ள நட்பு வைத்துக் கொண்டு விட்டாய். நியாயம் எவ்வளவு அழகாக இருக்கிறது: உண்மை என்னவென்றால், உனக்கு ஒரு புருஷனி டத்தில் துர் எண்ணம் உண்டாகி, அது பொறுக்க முடியாத நிலைமையிலிருந்து வந்தது. நீ அம்மாளுக்காக பயந்து கொண்டே வந்தாய்; இந்த மதனகோபாலன் விஷயத்தில் ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை உனக்கு அனுகூலமான ஒரு முகாந்திரமாக வைத்துக் கொண்டு, நீ உடனே துர்நடத்தையில் இறங்கிவிட்டாய்; நீ செய்த காரியம் சரியானதென்று காட்டிக்கொள்வதற்காக நீ அம்மாளை இப்படி இழிவாகத் துரவித்துப் பேச ஆரம்பித்து விட்டாய். சற்று முன் நீ என்ன சொன்னாய்? தாய் தகப்பன்மார்கள் உண்மையில் கெட்டவர்களாக இருந்தால், பிள்ளைகள் அவர்களைச் சரிப்படுத்த வேண்டுமேயன்றி, அவர்களைப் பார்த்துப் பிள்ளைகளும் குருட்டுத் தனமாகக் கெட்ட வழியில் இறங்கக் கூடாதென்பது உன்னுடைய கொள்கையென்று சொன்னாயே; அந்த நீதியை நீ ஏன் மறந்தாய்? அம்மாளிடத்தில் காணப்பட்ட சிறிய சந்தேக மாகிய ஒர் அற்பத் தவறுக்கு பதிலாக நீ அடியோடு பாதாளத்தில் விழுந்து விட்டாயே! அம்மாளுக்காவது உலக வாழ்க்கை எல்லாம் ஒருவாறாக முடிவடைந்து போய்விட்டது. நீயோ யெளவனப் பருவத்தில் உள்ள பெண். நீ ஒரு புருஷனைக் கட்டிக்கொண்டு நல்ல பெயரெடுத்து வாழ வேண்டாமா? அம்மாள் தமக்குத் தாமே எஜமானி; அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு எவருடைய தயவும் தேவையில்லை. அவர்கள் எவருக்கும் அஞ்சுவது அநாவசியம் நீ இன்றைக்கு ஒரு கள்ள நாயகனைப் பிடித்துக் கொண்டு எல்லோரையும் அசட்டையாக மதித்து உலகத்தாருக்குப் பயப்படாமல் நடந்தால், எல்லோரும் உன்னை விலக்கிவிட மாட்டார்களா இப்போது நீ செல்வாக்கான இடத்தில் இருக்கிறாய் என்றும் யெளவனப் பெண்ணாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/279&oldid=646148" இலிருந்து மீள்விக்கப்பட்டது