பக்கம்:மதன கல்யாணி-2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 மதன கல்யாணி

அதைக் கேட்ட கோமளவல்லியம்மாள் மிகுந்த விசனமும் கலக்கமும் சஞ்சலமும் அடைந்து யோசனையில் ஆழ்ந்தாள். அந்தச் சமயத்தில் தாதிகள் போஜனத்தை முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள், உடனே சகோதரிகளினது சம்பாஷணையும் அவ்வளவோடு முடிவுற்றது. அதுகாறும் அந்த சம்பாஷணையைக் கேட்டுக் கல்லாகச் சமைந்து நின்று கொண்டிருந்த கல்யாணி யம்மாள் தான் அதற்கு மேலும் ஜன்னலண்டை நின்றால், எவரேனும் கண்டு கொள்வார்கள் என்று நினைத்து அவ்விடத்தை விட்டுத் தனது அந்தப்புரத்தை நோக்கி நடக்கலானாள்.

அப்படி நடந்தவள் அளவிலடங்காத வியப்பும், திகைப்பும் பிரமிப்பும், விசனமும் அடைந்து சொப்பனாவஸ்தையில் ஆகாயத்தில் மிதந்து செல்பவள் போல மெய்ம்மறந்து, உயிரற்ற பதுமை போல நடந்தாள். தனது செவியில் விழுந்த சம்பாஷணை உண்மையில் நடந்ததோ, அல்லது கனவில் நடந்ததோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. தனது மூத்த குமாரி தன் விஷயத்தில் வைத்திருந்த அருவருப்பும், பகைமையும், கெட்ட அபிப்பிராய மும் எவ்வளவு அதிகமாக இருக்கின்றன என்பதைக் காண, அவளது உள்ளம் பதறித் தவித்தது. தான் அவளிடத்தில் எவ்வள விற் கெவ்வளவு வாத்சல்யமும் பிரேமையும் வைத்திருந்தாளோ அவ்வளவிற் கவ்வளவு தன்னிடத்தில் துரைஸ்ானியம்மாள் குரோதமும் வெறுப்பும் பாராட்டி அவமதிப்பாகவும் தூஷனை யாகவும் பேசியதை நினைக்க நினைக்க, அவளது மனம் அப்படியே இடிந்து போய்விடக் கூடிய மகா விபரீதமான நிலைமையை அடைந்தது. தான், மதனகோபாலனிடத்தில் எவ்விதமான துர் எண்ணமும் கொள்ளாமல், அவனை ஒரு குழந்தை போல மதித்து ஓர் அற்பக் காரியம் செய்யப் போனது ஒரு மலை போல வளர்ந்து தனக்கு எத்தனையோ தீமைகளைச் செய்ததுமன்றி, தனது புத்திரியையும் கெட்ட நடத்தையில் புகுத்தி விட்டதை நினைத்து, அவள் தன்னைத் தானே வெறுத்து வைது கொண்டாள். தான் ராமலிங்கபுரத்து ஜெமீந்தாருக்குக் கடிதம் எழுதியது முதலிய சகலமான சங்கதிகளையும் துரைஸானி யம்மாள் அறிந்து கொண்டிருந்தது பெருத்த விந்தையாகத் தோன்றியது. தனக்கு மோகனரங்கனிடத்திலிருந்து வந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/284&oldid=646158" இலிருந்து மீள்விக்கப்பட்டது