பக்கம்:மதன கல்யாணி-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 28?

கடிதத்தைப் போலத் தனது புத்திரிக்கும் ஒரு கடிதம் வந்திருந்ததி லிருந்து, அவளை உண்மையாகவே அபகரித்துப் போவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன என்பது நிச்சயமாகவே, அவளது புத்தி கலங்கியது, தேகம் தடுமாறியது. தனது மூத்த புத்திரிக்குத் தாதி குப்பம்மாளே துதாக இருந்து சகலமான காரியங்களையும் நடத்தி வருகிறாள் என்பதும் நிச்சயமாயிற்று. ஆகவே, அவளை இனி வேறே இடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட மகா சங்கடமான நிலைமையில் தனது இளைய குமாரியான கோமளவல்லியின் சிறந்த நற்குணங்களும், ஆழ்ந்த புத்திசாலித்தனமும், அவள் தன்னிடத்தில் வைத்திருந்த மதிப்பும், வாஞ்சையும், பயபக்தியும் அளவிடக்கூடாமல் இருந்ததை நினைக்க நினைக்க, இடையிடையே, கல்யாணி யம்மாள் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தவளாய், அத்தனை இடர்களுக்கிடையில், அப்படிப்பட்ட விலையில்லா மாணிக்கம் தனக்கு மகளாக இருந்தது ஒரு பெருத்த ஆறுதலாகத் தோன்றியது. தனது இளைய குமாரியைப் போலவே மூத்தவளும் நற்குண நல்லொழுக்கம் உள்ளவளாக இருந்தால், தனக்கு நிகரான அதிர்ஷ்டசாலிகள் வேறே எவரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைவு அடிக்கடி எழுந்து கல்யாணியம்மாளது மனதை வதைத்துப் புண்படுத்தியது.

அப்படிப்பட்ட நிலைமையில் அந்த அம்மாள் தனது அந்தப் புரத்தை அடைந்து நாற்காலியின் மேல் உட்கார்ந்து சாய்ந்தாள். உடனே வாசற்கதவைத் திறந்து கொண்டு. பொன்னம்மாள் வந்தாள். வக்கீல் சிவஞான முதலியார் பின்னால் வந்து உள்ளே நுழைந்தார். உடனே பொன்னம்மாள் கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு வந்து சேர்ந்தாள். வக்கீலைக் கண்டவுடனே கல்யாணியம்மாள் எழுந்து மரியாதையாக நின்று, “வாருங்கள், வாருங்கள். இந்த சோடாவில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று அன்பாக உபசரிக்க, அவர், “வருகிறேன்; நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் கல்யாணியம்மாளுக் கருகில் இருந்த ஒரு சோபாவில் உட்கர அந்த அம்மாளும் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டவளாய், பாலாம்பாளுக்கு மைனரால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த பத்திரத்தையும், அன்றைய தினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/285&oldid=646160" இலிருந்து மீள்விக்கப்பட்டது