பக்கம்:மதன கல்யாணி-2.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மதன கல்யாணி

ஒரு பெண் பிள்ளை எவ்வளவு துணிகரமான காரியத்தைச் செய் திருக்கிறாள்! அவள் சாதாரண மனிஷியாக இருக்கவே மாட்டாள்! பெருத்த ராக்ஷசியாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள்.

சிவஞான முதலியார், “அவள் எப்படிப்பட்ட கெட்டிக்காரியாக இருந்தாலும், ராக்ஷசியாக இருந்தாலும், அவளைப் போலீசார் எப்படியும் பிடித்தே தீருவார்கள்; பல நாளைய திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான் என்று சொல்லுவார்கள் அல்லவா.” என்று கூறிய வண்ணம், பத்திரத்தையும், கடிதத்தையும் வாங்கிப் படித்துப் பார்த்தார். பார்த்தவர் கல்யாணியம்மாளை நோக்கி, “இந்தப் பத்திரம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுப் போனதைப் பற்றி இனி நாம் அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை; நல்ல வேளையாக இந்தப் பத்திரம் நம்மிடத்தில் வந்து சேர்ந்துவிட்டது; இந்தப் பத்திரத்தில் நம்முடைய கையெழுத்துக்கள் இருப்பதுதான் முக்கியமான விஷயம். சப் ரிஜிஸ்டிராருடைய கச்சேரியில் இன்னார் என்று நம்முடைய பெயர்களை எழுதிக் கொண்டிருப் பார்கள்; நீங்கள் ஒரு காரியும் செய்யுங்கள் இந்தப் பத்திரத்தைப் போல ஒரு நகல் எழுதி வைத்துக்கொண்டு, இதை உடனே நெருப்பில் போட் டுக் கொளுத்தி விடுங்கள். நாம் இதில் கையெழுத்து போடவில்லை என்றும், பாலாம்பாளே நம்முடைய கையெழுத்தைப் போலப் பொய்க் கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் செய்வித்திருக்கிறாள் என்றும் நாம் சொல்லி வாதாடி ஜெயித்து விடலாம்; இந்தப் பத்திரம் அவர்களிடத்தில் இல்லாமல் போய் விட்டதாகையால், அவர்கள் சப் ரிஜிஸ்டிரார் கச்சேரியி லிருந்து ஒரு நகல் வாங்கி வைத்துக் கொள்ள உத்தேசித்திருக் கிறார்கள் போலிருக்கிறது; அப்படியே செய்யட்டும்; நாம் தான் கையெழுத்துச் செய்தோம் என்பதை இந்த அசல் பத்திர மில்லாமல் ருஜூப்படுத்த முடியாது; இந்தப் பத்திரத்தில் உள்ள விஷயங்களும் பைத்தியக்கார சங்கதிகளாக இருக்கிறபடியால், இது எழுதப்பட்டது நமக்குத் தெரியாதென்று நாம் வாதாடினால், அதை நியாயஸ்தலத்தாரும் உண்மை என்றே நம்புவார்கள். நாம் சாட்சிக் கையெழுத்துச் செய்தோம் என்பதை அவர்கள் ருஜூப்படுத்த முடியாமல் போய் விடும். அதன் பிறகு பத்திரம் மைனர் ஒருவரால் மாத்திரம் தமது சொந்த ஜெவாப்தாரித் தனத்திலேயே எழுதிக் கொடுக்கப்பட்டதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/288&oldid=646165" இலிருந்து மீள்விக்கப்பட்டது