பக்கம்:மதன கல்யாணி-2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மதன கல்யாணி

அவருக்கு எவ்வளவு தெரிய வேண்டுமோ அதை வெளியிட்டு, தமது கையில் இருந்த நக்ஷத்திரத் தரகனது கடிதத்தையும் கொடுத் தார். ஆனால் மோகனரங்கன் மீது துரைஸானியம்மாளே காதல் கொண்டிருக்கிறாள் என்பதையும், அவனுக்கும் அவளுக்கும் தேக சம்பந்தமும் ஆகிவிட்ட தென்பதையும் மறைத்து, குமாஸ்தா வேலையிலிருந்த மோகனரங்கன் ஜெமீந்தார் வீட்டுப் பெண் மீது துர்மோகங் கொண்டு, அந்தப் பெண்ணின் மனதை மருந்தின் p601075 மயக்கி, அவளைப் பலவந்தமாக அபகரித்துப் போக எத்தனிப்பதாகக் கூறியதன்றி, தாங்கள் வேலைக்காரர்களுக் கெல்லாம் பொய்யாகச் சொல்லியிருந்த வரலாற்றையே அவருக் கும் தெரிவித்து வைத்தார்.

அந்த விவரங்களை எல்லாம் கேட்டு அந்தக் கடிதத்தையும் படித்த இன்ஸ்பெக்டர் குலாம்ராவுத்தர் மிகுந்த கவலையும் கலக்க மும் அடைந்து, “ஏதேது! இது மகா துணிகரமான காரியமாக இருக்கிறதே! இப்படிப்பட்ட காரியங்கள் பட்டிக்காடுகளிலே தான் நடப்பதுண்டென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சென்னப் பட்டணத்தில் இப்படிப்பட்ட பகிரங்கத் திருட்டு இது வரையில் நடந்ததாகவே நான் கேள்விப்பட்டதில்லை; இருந் திருந்து இது என்னுடைய டிவிஷனில் தானா நடக்க வேண்டும்! இவன் அசாத்தியமான மனிதனாக இருக்கிறானே! இதற்கு நாம் தக்கபடி முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், வீணாக எனக்குக் கெட்ட ஷராவோ, சம்பளக் குறைவோ, உத்தியோகம் தகையரோ ஏற்படுவது நிச்சயம்; சரி; நான் எதற்காக வந்தேனோ அந்தக் காரியத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளுகிறேன். அடேய் 1317 அந்த வண்டிக்காரர்களை அனுப்பிவிட்டு இப்படி வா; உனக்கு இங்கே அவசரமான ஜோலி இருக்கிறது. முதலியாரே! வாருங்கள்; பங்களாவுக்குப் போவோம்; நான் முதலில் இந்த பங்களாவுக்குள் நுழைந்து எல்லா இடங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிய வண்ணம் குதிரையை அந்த பங்களாவின் பக்கமாகத் தட்டி நடத்தினார்; சிவஞான முதலியார் உடனே ஸாரட்டில் ஏறிக் கொண்டு பின்னால் தொடர்ந்து வந்தார். ஜெவானும் வைக்கோல் வண்டிகளை அனுப்பிவிட்டு, அவர்க ளோடு கூடவே வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/296&oldid=646181" இலிருந்து மீள்விக்கப்பட்டது