பக்கம்:மதன கல்யாணி-2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 மதன கல்யாணி

சிறிதும் எதிர்பாராத அந்த மறுமொழியைக் கேட்ட அவர்கள் இருவரும் வியப்பும் கலக்கமும் திகைப்பும் அடைந்தனர். ஏனெனில், ஆறேகால் மணியாகியும், எவரும் வரவில்லை ஆகையால், கடிதம் பொய்யானதென்று நினைத்து ஒருவாறு மகிழ்ச்சியடைய ஆரம்பித்த அவர்களுக்கு, அந்தக் கடிதம் உண்மையானது தான் என்ற நிச்சயம் உண்டாகிவிட்டது. உடனே சிவஞான முதலியார் இரண்டு மூன்று தரம் நன்றாகக் கனைத்துக் கொண்டவராய் மெல்ல அவளிடம் நெருங்கித் தமது கையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு கடிதத்தை நீட்டி, “இதோ இந்தக் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடு” என்று கூற, உடனே அந்தத் துருக்க ஸ்திரீஅதை வாங்கிக் கொண்டு அவருக்குச் சலாம் செய்து, “நான் போகலாமா?” என்றாள். உடனே முதலியார், “ஓ! போகலாம்” என்றார். அதைக் கேட்ட துருக்க ஸ்திரி. “எனக்கு ஏதாவது இனாம் சனம் இல்லையா?” என்றாள். அந்தச் சமயத்தில் இரண்டு ஜெவான்களும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் திடீரென்று வந்து நாற்புறங்களிலும் சூழ்ந்து கொண்டனர்; இன்ஸ்பெக்டர் தம து வஸ்திரங்களை எல்லாம் விலக்கிவிட்டு இன்ஸ்பெக்டரது உடையிலேயே வந்திருந்தார். அவ்வாறு போலீசார் திடீரென்று வந்து அந்தத் துருக்க ஸ்திரியை வளைத்துக் கொள்ளவே, அவள் திடுக்கிட்டு மான் போல மருண்டு மிகுந்த அச்சத்தோடு நாற்புறங் களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கடிதத்தை விரைவாக மடியில் சொருகிக் கொண்டு நடுநடுங்கி நின்றாள். உடனே இன்ஸ் பெக்டர் அவளை நோக்கிப் புன்னகை செய்து, “ஏ! பெண் பிள்ளை உனக்கு இனாம் சனாம் கொடுக்கும்படி கேட்டாயோ! நீ இவர்களுக்கு என்ன உபகாரம் செய்தாய்? எதற்காக இனாம் கேட்கிறாய்?” என்றார்.

அதைக் கேட்ட அந்த ஸ்திரீ அவர்களுக்கு மறுமொழி சொல்லத் தான் கடமைப்பட்டவள் அல்ல எனக் காட்டிக் கொள்பவள் போல இரண்டோரடி எடுத்து வைத்து, “இனாமா? யாருக்கு இனாம்? நான் ஏன் இனாம் கேட்கிறேன்?” என்று கூறிய வண்ணம் அப்பால் நடந்தாள். அப்போது இன்ஸ்பெக்டர் அவளுக்கு முன்னால் போய் வழிமறித்து நின்று, “என்ன! நான் கேட்கிறேன்! நீ சரியானபடி பதில் சொல்லாமல் போகிறாயே! உன்னைச் சுலபத்தில் விட்டுவிடுவோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/302&oldid=646195" இலிருந்து மீள்விக்கப்பட்டது