பக்கம்:மதன கல்யாணி-2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 என்று பார்த்தாயா? நில் அப்படியே நகராதே. இவர்களிடத்தில் எதற்காக இனாம் கேட்டாய்? நிஜத்தைச் சொல்லி விடு” என்று அதட்டிக் கூறினார். அதைக் கேட்ட அந்த ஸ்திரி நிரம்பவும் பயந்து அழுபவள் போல நடித்து, “ஐயா! நான் வழியோடு போகிற பிச்சைக்காரி, என்னை ஏன் இப்படி வதைக்கிறீர்கள்? நான் என்ன திருடினேனா? முடிச்சவிழ்த்தேனா? நான் ஏழை எனக்கு ஏதாவது பிச்சை கொடுங்கள் என்று இவர்களிடத்தில் கேட்டேன். இவர்கள் கொடுக்கவில்லை. போகிறேன்” என்று கூறிய வண்ணம் மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள். அப்போதும் அவளை விடாமல் மறித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், “ஏ! பெண் பிள்ளை! நீ இப்படி அழுதால் உன்னை விட்டுவிடுவோம் என்று நினைக்காதே; நீ ஒரு நிமிஷத்துக்கு முன் இவர்களிடத்திலிருந்து ஒரு கடிதத்தை வாங்கிக் கொண்டாய், உடனே இனம் கேட்டாய்; இப்போது பிச்சைக்காரி என்றும், பிச்சை கேட்டேன் என்றும் பொய் பேசுகிறாய். எனக்கு எல்லாச் சங்கதியும் தெரியும். நீ இனி மறைத்துப் பேசுவதில் உபயோகமில்லை. உண்மையில் நீ யார்? உன்னை இங்கே அனுப்பிய மனிதர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? அந்த விவரங்களை எல்லாம் உள்ளதை உள்ளபடி நீ சொல்லியே தீரவேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய முதுகுத் தோலை உரித்துவிடச் சொல்லுவேன். ஜாக்கிரதை’ என்று அதட்டிக் கூறினார். அதைக் கேட்ட அந்த ஸ்திரி ஒன்றையும் அறியாதவள் போல நடித்து, “ஐயோ ஐயோ! அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே” என்று பெருத்த கூக்குரலிட்டு அழுது ஆரவாரம் செய்யத் தொடங்கி, “வழியோடு போன பிச்சைக்காரி யான என்னைப் பிடித்துக் கொண்டு, கடுதாசி என்கிறார்கள், சங்கதி எல்லாம் தெரியும் என்கிறார்கள், ஐயோ! எனக்கு ஒரு சங்கதியும் தெரியவில்லையே!” என்று கூறி ஒலமிட்டமுத் தொடங்கினாள். அவளது மகா சாமர்த்தியமான பாசாங்கைக் கண்ட சிவஞான முதலியாரும், கல்யாணியம்மாளும் பிரமித்து வாய் திறந்து பேச மாட்டாமல் ஸ்தம்பித்து நின்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் அந்த ஸ்திரியை நோக்கி, “அடி கழுதை உன்னை யாராவது தொட்டார்களா? அடித்தார்களா? ஏன் இப்படிக் கூச்சலிட்டு அழுகிறாய். இவர்கள் கொடுத்த கடிதம் உன் மடியில் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/303&oldid=646197" இலிருந்து மீள்விக்கப்பட்டது