பக்கம்:மதன கல்யாணி-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 307

இப்போதாவது உண்மையைச் சொல்லிவிடு!” என்று நயமாக வினவினார்.

ராஜாயி, “நான் சொல்லக்கூடியதை எல்லாம் முன்பே சொல்லி விட்டேன். இனி நான் சொல்வதற்கே ஒன்றுமில்லை. போலிஸார் அக்கிரமமாக என்னை வதைத்தால் நான் என்ன செய்யலாம். அவர்கள் செய்வதைச் செய்து கொள்ளட்டும்” என்றாள். -

உடனே கல்யாணியம்மாள் வெளியில் நின்ற ஒரு வேலைக் காரியைக் கூப்பிட்டு உடனே பெட்டி வண்டியைத் தயாரிக்கும்படி உத்தரவு செய்தாள். சில நிமிஷங்களில் பெட்டி வண்டி ஒன்று ஆயத்தமாயிற்று. இன்ஸ்பெக்டர் நான்கு ஜெவான்களை பங்கள விலேயே ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தம்மோடு ஒருவனை அழைத்துக் கொண்டு ராஜாயியின் கையில் விலங்கைப் பூட்டி அவளை அழைத்துக் கொண்டு வெளியிலே சென்றனர். சென்றவர், சிவஞான முதலியாரை நோக்கி, “ஐயா! நான் அரை நாழிகைக்குள் திரும்பி வந்துவிடுகிறேன். அது வரையில் எல்லா ஆள்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி நீங்களும் விழிப்பாகவே இருங்கள். நான் போகும் பெட்டி வண்டியை என்னுடைய ஜெவானே ஒட்டுவான். வீணாக உங்களுடைய ஆள்களில் ஒருவனையும் அனுப்ப வேண்டாம். நான் திரும்பி வருவதற்குள் ஏதாவது விபரீதம் நேர்ந்தால், ஜெவான்களில் ஒருவனை உடனே ஒரு கால் குதிரைமேல் வைத்து என்னிடத் துக்கு அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு, வெளியிலே போய், ராஜாயியைப் பெட்டி வண்டிக்குள் உட்கார வைத்துக் கொண்டு போய்விட்டார். -

அப்போது மாலை ஏழுமணி சமயமாகிவிட்டது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. பங்களாவின் ஒவ்வோரிடத்திலும் பிரகாச மான விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டன. பங்களாவிலிருந்த வேலைக்காரர்களும், சைதாப்பேட்டையில் இருந்து வந்த ஆட்களும் சேர்ந்து சுமார் அறுபது மனிதர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் பெருத்த தடிகளை வைத்துக் கொண்டு நாற்புறங் களிலும் எச்சரிக்கையாக நின்று இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் வரவர, ‘சிவஞான முதலியார், கல்யாணியம்மாள் முதலிய சகலமான ஜனங்களினது. நெஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/311&oldid=646215" இலிருந்து மீள்விக்கப்பட்டது