பக்கம்:மதன கல்யாணி-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 மதன கல்யாணி

திடுக்கு திடுக்கென்று அடித்துக் கொண்டது; எல்லோரும் நெருப்பின் மேல் கிடப்பவர் போல, என்ன செய்வதென்பதை அறியாதவராகத் தத்தளித்து அங்குமிங்கும் போவதும் வருவதும் பங்களாவின் நாற்புறங்களையும் உற்றுப் பார்ப்பதுமாக இருந்தனர். அதுகாறும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பங்களாவிலிருந்தது அவர்களுக்குப் பெருத்த பலமாக இருந்தது. ஆகையால் அவர் எப்போது திரும்பி வரப்போகிறார் என்ற ஆவலே பெரிதாக எழுந்து வதைத்தது. சரியாக ஒன்பது மணிக்குத் தாலி கட்டுவதாகக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த தாகையால், எதிரிகள் வரக்கூடிய காலம் நெருங்கிவிட்டது; இந்த நிமிஷத்திலோ அடுத்த நிமிஷத்திலோ ஆட்கள் வந்துவிடுவார்கள் என்று எல்லோரும் கலவரமடைந்து விவரிக்க ஒண்ணாத சஞ்சலமுற்றுத் துடிதுடித் திருந்த சமயத்தில், பங்களாவின் வாசலில் மோட்டார் வண்டி ஒன்று வந்து நின்றது. அதன் ஒசையைக் கேட்டதும் எல்லோரும் திடுக்கிட்டு நடுங்கினர். அடிமுதல் முடிவரையில் உரோமம் சிலிர்த்தது. “ஆள்கள் வந்துவிட்டார்கள்” என்று ஒவ்வொருவரும் ரகசியமாகச் சொல்லிக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் அந்த வண்டியிலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குலாம் ராவுத்தரும், அவரோடு சென்ற போலிஸ் ஜெவானும் இறங்கி உள்ளே வரவே, அவர்களைக் கண்டு எல்லோரும் திரும்பவும் தைரியமும் உற்சாகமும் அடைந்தனர். அவர் எப்போது வருவார் வருவார் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும் எதிர்கொண்டோடி அவரை நடுவழியி லேயே கண்டனர்.

ஆனால், இன்ஸ்பெக்டர் அன்றைய பகலில் இருந்தது போல அப்போது அவ்வளவு மனோதிடத்தோடிருந்ததாகத் தோன்ற வில்லை; அவரது முகத்தின் கவலையும் உடம்பின் பதைபதைப் பும் ஏதோ விபரீதத்தைக் காட்டின. அந்த மாறுபாட்டைக் கண்ட மற்ற இருவரது நெஞ்சமும் கலங்கித் தவித்தது. விஷயம் இன்ன தென்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் துடித்தது: அந்த நிலைமையில் அவர்கள் மூவரும் ஒரு தனியான இடத்திற் குப் போய்ச் சேர்ந்தனர்; உடனே இன்ஸ்பெக்டர் அவர்களை நோக்கி, “முதலியாரே! நான் இன்று பகல் முழுதும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/312&oldid=646216" இலிருந்து மீள்விக்கப்பட்டது