பக்கம்:மதன கல்யாணி-2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 . மதன கல்யாணி

காலையிலே தான் வருவார்கள் என்றும் இவர்கள் சொல்லட்டு, அவர்கள் சந்தேகித்தால், அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு வந்து உள்ளே பார்த்துவிட்டுப் போகும்படி செய்யட்டும். அவர்கள் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்; நம்மவர்கள் எதிரி களிடத்தில் சண்டைக்கே போக வேண்டாம். அவர்கள் ஏதாவது சொத்துகளை எடுத்தால் அப்போது வேண்டுமானால், அதைத் தடுக்கட்டும். அநாவசியமான கலகம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி எச்சரித்து வையுங்கள். அதுவும் தவிர, இன்னொரு காரியம்; அங்கே ஜெமீந்தாரிணி அம்மாளுக்கும் பெண்களுக்கும் துணையாக நாலைந்து தாதிகளும் கூட இருப்பது நல்லது; நான் ஒரு மோட்டார் வண்டி தான் கொண்டு வந்திருக்கிறேன். இங்கே இன்னொரு மோட்டார் வண்டி அகப்படுமா?” என்றார். முதலியார், “இல்லை; ஸாரட்டு தான் இருக்கிறது” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அப்படியானால், ஒரு காரியம் செய்வோம். நான் கொண்டு வந்திருக்கும் மோட்டார் வண்டியில் நான்கு மனிதர்கள் தான் உட்கார இடமிருக்கிறது. ஜெமீந்தாரிணி அம்மாளும், பெண்கள் இருவரும் உள்ளே உட்கார்ந்து கொள்ளட்டும். நான் ஒட்டுகிறேன். என்னுடைய ஜெவான்கள் ஐந்து பேரும் மோட்டாரின் முன்னாலும் பின்னாலுமாகத் தொற்றிக்கொண்டு நிற்கட்டும். ஸாரட்டு வண்டியில் நாலைந்து தாதிகளை வைத்து அதை நீங்கள் ஒட்டிக் கொண்டு வாருங்கள். இரண்டு வண்டிகளையும் சேர்ந்தாற் போல ஒட்டிக் கொண்டு போலீஸ் கமிஷனருடைய ஆபீசுக்குப் போய்விடுவோம். போங்கள்; சீக்கிரமாக வாருங்கள்” என்றார். அதைக் கேட்ட சிவஞான முதலியார் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு ஒட்டமாக ஓடினார்.

அதன் பிறகு அரைக்கால் நாழிகை நேரம் கழிந்தது. அரண்மனை முழுதும் அல்லோலகல்லோலப்பட்டது. யாவரும் பயத்தினால் வேர்த்து விருவிருத்துப் போயிருந்தனர். தான் வரமாட்டேன் என்று மறுத்த துரைஸானியம்மாளை, கல்யாணியம்மாளும் தாதிகளும் பலவந்தமாக இழுத்துக் கொண்டு வந்து மோட்டார் வண்டியில் வைத்தனர். கோமளவல்லியும் கல்யாணியம்மாளும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர். அந்த மோட்டார் வண்டி கோஷாப் பெண்பிள்ளைகளுக்காக உபயோகப்படும் மூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/316&oldid=646224" இலிருந்து மீள்விக்கப்பட்டது