பக்கம்:மதன கல்யாணி-2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற கதையின் தொடர்ச்சியாக இக்கதையிருக்கிறது. அந்தக் கதையில் கண்ணப்பாவும், வடிவாம்பாளும், திகம்பர சாமியாரும் முக்கிய பாத்திாது களாக விளங்கியதுபோல் இதில் கண்ணப்பாவின் சகோதரரான கந்தசாமியும், முடிவில் அவருடைய மனைவியான மனோன்மணியும், திகம்பர சாமியாரும் முக்கிய நடிகர்களாக இருக்கின்றனர். கல்வி அறிவில் கரை கடந்து மேனாட்டுப் பழக்க வழக்கங்களிலும் சம்பிரதாயங்களிலும் முழுகி, நமது புராதன தர்மங்களில் மிகுந்த வெறுப்படைந்திருந்த கதாநாயகியை கந்தசாமிக்கு மணமுடிக்க உபயகுலப் பெற்றோர்களும் தீர்மானம் செய்திருந்தும், பூர்விக தர்மங்களில் கண்ணுங் கருந்துமுடைய வனாயினும் தான் மணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணை நேரில் கண்டு அவளுடைய குணாதிசயங்களை அறிந்துவர விரும்பிய கந்தசாமி தமது நண்பரொருவருடன் அவருடைய மனைவிபோல் வேடம் பூண்டு பெண்ணைப் பார்க்கச் செல்லுவதும், கந்தசாமியின் பெற்றோருடைய குடும்பத்தாரிடத்தில் தீரா வைரம் வைத்திருந்த சிலர் தங்களுடைய கூடிாத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளக் கருதி மணமகளைக் களவாட வருவதும், பெண்ணைப் பார்க்க வந்தவர்கள் சொல்லியபடி மணமகளின் குடும்பத்திற்கு அவர்கள் பந்துக்களல்லவென்பதை மணமகனின் பிதா உணர்ந்தும், அவர்களை அவர்களறியாமல் சிறை வைப்பதும், மணமகளைக் களவாட வந்தவர்கள் பெண் வேஷத்துடன் வந்திருந்த கந்தசாமியைக் களவாடிச் செல்லுவதும், அவனை சட்டநாத பிள்ளையின் சகோதரன், புருஷன் என்பதை அறியாமல் விவாகம் செய்து கொள்ளுவதும், அவனிடமிருந்து கந்தசாமி சாமர்த்தியமாக வெளிப்படுவதும், திகம்பர சாமியாருக்கு அவருடைய விரோதிகள் செய்யும் கேடுகளும் அவை களிலிருந்து அவர் தப்பி, சமயத்திற்குத் தகுந்த வேடந்தரித்து தமது நண்பர்களுக்கு உதவி செய்து வருவதும், காணாமற்போன கந்தசாமி திரும்பி வரவேண்டுமென்று அவனுடைய பெற்றோரும், உற்றாரும் தெய்வப் பிரார்த்தனை நடத்துவதும் அதுகாலை கந்தசாமியின் தகப்பனார் தெய்வத்தைத் தொழுத பாடல்களின் உருக்கமான தன்மையையும் அவைகளின் உட்கருத்தையும் உணர்ந்த மனோன்மணி தனது புத்தியை மாற்றிக் கொண்டு உத்தமப் பெண்மணியாக மாறிவிடுவதும், முடிவில் கந்தசாமி கூேடிமமாகத் திரும்பி வந்தபிறகு இருவருக்கும் சுபமுகூர்த்தத் தில் விவாகம் நடைபெறுவதும் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படிப்பவருடைய மனதில் நல்லெண்ணங்களும், தெய்வபக்தியும் சுதா வாகவே எழுந்து நவீன நாகரிகத்தில் வெறுப்பு ஏற்படக்கூடிய விதமாக இது எழுதப்பட்டிருக்கிறது. இத்துணை உயரிய நாவல்களை எழுதித் தமிழ் உலகிற்கு உதவிவரும் இந்நூலாசிரியருக்குத் தமிழ் மக்கள் தங்கள் பூர்ண ஆதரவைத் தந்து, மேன்மேலும் இத்துறையிலிடுபட அவருக்கு ஊக்கத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/326&oldid=853222" இலிருந்து மீள்விக்கப்பட்டது