பக்கம்:மதன கல்யாணி-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 35

னாலும் புருஷரை எல்லாம் மயக்கினர். எங்கு நோக்கினும், ஆண் பாலரும் பெண்பாலரும் ஜதைஜதையாகப் பிரிந்து போய் உல்லாச மாக இருந்தனர்.

அந்த நிலைமையில் மணி ஒன்பதாயிற்று. உடனே மைனர் துரைராஜாவை விட்டுப் பிரிந்து, அவன் திரும்பி வரும் வரையில் ஒரு குறித்த இடத்தில் இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டான். துரைராஜா மாத்திரம் பாலிவாலா பார்சீ நாடகக் கொட்டகைக் கெதிரில் தொப்பியணிந்து துரையைப் போலவே நின்று கொண்டிருந்தான். அவனது வலது மார்பில் சொருகப் பட்டிருந்த வைரப் பதக்கம் மின்சார விளக்குகளின் பிரகாசத்தினால் நட்சத்திரத் திரளைப் போல ஜில்ஜில்லென்று ஒளிவீசின. அவன் இப்புறம் அப்புறம் திரும்பிப் பார்த்த வண்ணம் மிகவும் பதை பதைத்து நின்று கொண்டிருந்தான். மணிக்கூண்டுகளில் மணி சரியாக ஒன்பதடித்தது. அடுத்த நிமிஷத்தில் அவனுக்குப் பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண் வந்து நின்றாள். திரும்பி அவளைப் பார்த்த துரைராஜா ஒரு நிமிஷ நேரம் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டான். தன்மீதிருந்த வைரப் பதக்கத்தைப் போலவே, அவளது இடது மார்பின் மீதும் ஒரு பதக்கம் அமர்ந்து புன்னகை செய்து ஒளிக்கற்றைகளாகிய லட்சம் கரங்களால், அவனை வர வேற்பது போலத் தோன்றியது. அந்த ஸ்திரீதத்ரூபம் வெள்ளைக் காளியைப் போலவே காணப்பட்டாள். ஆனால் அவளது முகம் முழுதும் முகமூடியால் மறைக்கப்பட்டிருந்தது. கண்களுக்காக விடப்பட்டிருந்த இரண்டு தொளைகளின் வழியாக, இரண்டு அற்புதமான கருவிழிகள் ஜ்வலித்தன. அவளது நடை உடை பருமன் திரட்சி உயரம் அங்க அமைப்பு மார்பின் எழுச்சி முதலிய யாவும் ஒன்றுகூடி, அவள் பதினேழு அல்லது பதினெட்டு வயதடைந்த மகா அழகு வாய்ந்த அற்புத ரமணிய மங்கை என்பதை வெளிப்பார்வையிலேயே நன்றாகத் தோற்றுவித்தன. அப்படிப்பட்ட தெய்வ கன்னிகையைக் கண்ட துரைராஜா கரை கடந்த பிரம்மாநந்த மடைந்து பூரித்துப் புளகாங்கித முற்றவனாய், தனது அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் என்று நினைத்து அளவளாவி, அவளிடத்தில் எப்படி நெருங்குவதென்று அஞ்சி மெளனமாக நின்றான். அதற்குள் அந்த ஸ்திரியே அவனிடத்தில் நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/39&oldid=646255" இலிருந்து மீள்விக்கப்பட்டது