பக்கம்:மதன கல்யாணி-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதன கல்யாணி


14-வது அதிகாரம்

காணிக்குற்றம் கோடிக்கேடு

பன்னிரண்டாவது அதிகாரத்தின் முடிவில் கல்யாணியம்மாளும், சிவஞான முதலியாரும் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை அடைந்து, அந்த ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரே இல்லை யென்றும், அதற்குச் சிறிது நேரத்திற்கு முன் எந்த இன்ஸ்பெக்டரும் குதிரையின் மீதேறி அங்கே வரவில்லை என்றும்இ சப் இன்ஸ்பெக்டர் சொல்லக்கேட்டுத் திகைத்துக் கல்லாகச் சமைந்து நின்றதாகச் சொல்லப்பட்டது அல்லவா.

அவ்வாறு போலிஸ் இன்ஸ்பெக்டர் போல வேஷம் போட்டு வந்து கொள்ளையடிப்பது, அதுவரையில் கண்டும் கேட்டுமிராத அபூர்வ சம்பவமாதலால், அதைக்கேட்ட கல்யாணியம்மாள், சிவஞான முதலியார், வண்டிக்காரன் ஆகிய மூவரும் அதியாச்சரிய மடைந்ததன்றி, சப் இன்ஸ்பெக்டரும், இதர ஜெவான்களும் அந்த வரலாற்றைக் கேட்டு அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்து, அப்படியே மூக்கின் மீது விரலை வைத்து ஒன்றையும் சொல்ல மாட்டாமல் வாய்பேசா ஊமைகளாக நின்றனர். அவ்வாறு, ஐந்தாறு நிமிஷநேரம் கழிய, அந்த ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர், முதலில் ஒரு ஜெவானைத் தமது வீட்டிற்கு அனுப்பி, ஒரு சேலையையும் சில வஸ்திரங்களையும் எடுத்துவரச் செய்து, அம்மூவருக்கும் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்த பின்னர்; அவர்கள் யாரென்ற விவரங்களையும், வழிப்பறியின் வரலாறு களையும், திருடன் அடிபட்டிருந்தபின், போலீஸ் இன்ஸ் பெக்டரைப்போல வந்தவர் சொத்துகளடங்கிய மூட்டையை எடுத்துக்கொண்டு ஒடிப்போன விவரத்தையும், அவ்வாறு முட்டையை அபகரித்துக்கொண்டு போனவரது உயரம், பருமன், நிறம், உத்தேச வயது முதலிய குறிப்புகளையும், அவர் ஏறி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/5&oldid=646280" இலிருந்து மீள்விக்கப்பட்டது