பக்கம்:மதன கல்யாணி-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மதன கல்யாணி

திகைத்து நின்றிருந்த தருணத்தில், “என்ன சங்கதி? ஏன் இப்படி நிற்கிறாய்” என்ற ஒரு குரல் உண்டாயிற்று; உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த துரைராஜா தனக்கருகில் மைனர் வந்து நின்றதைக் கண்டான். காணவே, ஒருவாறு லஜ்ஜை அடைந்தவனாய், “என்ன மாப்பிள்ளை ஜாகைக்குத் திரும்பலாமா?” என்றான்.

அப்போது அவளுக்கருகில் ஜனக்கும்பல் இருந்தமையால், அவர்கள் இருவரும் அப்பால் நடக்கலாயினர். அப்போது மைனர், “அடேயப்பா ஆசாமி பலே சொகுசாக இருக்கிறாளே! சீமையில் இருந்து நேராக இப்போதே கப்பலில் வந்திறங்கிய அசல் வெள்ளைக்காரி போல இருக்கிறாளே! மெய்யாகவே இவள் வெள்ளைக்காரியா அல்லது நம்முடைய ஜாதியாளா? இருந்தாலும் நீ நல்ல அதிர்ஷ்டசாலியப்பா! எனக்கு பாலாம்பாள் கிடைத்ததைப் பற்றி நான் இதுவரையில் மகா பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த கந்தருவப் பெண்ணைப் பார்த்தபின், அவள் இவளுடைய கால்துசுக்கும் இணை நிற்கமாட்டாள் என்று நினைக்கிறேன். என்ன சமாசாரம்? முகதரிசனமாவது கிடைத்ததா? அல்லது, அதற்கு மேலும் ஏதாவது கிடைத்ததா?” என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா ஒன்றையும் சொல்லமாட்டாமல், சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கி, அஸ்வாரஸ்யமாகப் பேசத் தொடங்கி, “என்ன மாப்பிள்ளை போம்; முகதரிசனமும் கிடைக்க வில்லை. அவள் யார் என்பதும் தெரியவில்லை. அவளைக் கையால் தொடக்கூட முடியவில்லை” என்றான்.

அவனது சொல்லை நம்பாத மைனர், “ஒகோ! என்னை ஏமாற்றுகிறாயே! இதற்கென்று இத்தனை பாடுபட்டு இவ்வளவு துரம் வந்தவள் ஒன்றையும் சொல்லாமல் சும்மா போய் விடுவாளோ! யாருக்குக் காது குத்துகிறாய்? என்னிடத்தில் சொன்னால் நான் போட்டிக்கு வரப் போகிறேன் என்று பயப்படுகிறாய் போலிருக்கிறது. அப்படியானால், அவள் எழுதிய கடிதத்தை மாத்திரம் ஏன் என்னிடத்தில் காட்டினாய்?” என்று நிஷ்டுரமாகப் பேசினான். -

அதைக் கேட்ட துரைராஜா நயமாக, “மாப்பிள்ளை! உன்னிடத்தில் நான் பொய் சொல்லுவேனா? பிரமாணமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/52&oldid=646285" இலிருந்து மீள்விக்கப்பட்டது