பக்கம்:மதன கல்யாணி-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 49

சொல்லுகிறேன். அவளை நான் இன்னம் தொடக்கூட இல்லை. அவளுடைய பெயர்கூடத் தெரியவில்லை. அவள் யாரோ ஒரு ஜெமீந்தார் வீட்டுப் பெண்ணாம். அது வரையில் நிச்சயமாகத் தெரிகிறது. அவளுடைய பெற்றோர் அவளை வேறு யாருக்கோ கட்டிக்கொடுக்கப் போகிறார்களாம். அந்த மனிதன் அவளுடைய மனசுக்குப் பிடித்தவனல்லவாம். அவள் என்மேல் அபாரமான பிரியம் வைத்திருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிகிறது. என்னுடைய நடத்தையைப் பற்றி அவளிடத்தில் எவனோ தாறுமாறாக என்னென்னவோ உளறி வைத்திருக்கிறான். அதனால், அவள் என்னை உடனே நம்பமாட்டேன் என்று மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டாள். அவளுடைய முகத்தையா வது காட்டும்படி நான் எவ்வளவு தூரம் கேட்டும், அவள் அதற்கு இடங்கொடுக்கவே இல்லை. என்னோடு இன்னும் சில முறை பேசிப்பழகிய பிறகுதான், அவளுக்கு என்மேல் ஒரு நம்பிக்கை ஏற்படுமாம். அவள் திரும்பவும் எனக்கு எழுதும் போது, நான் அவளைப் பார்க்கும்படி சொல்லிவிட்டு, தனக்கு நேரமாய் விட்டதென்று எழுந்து போய்விட்டாள். அவ்வளவே நடந்த விஷயம்” என்றான். -

அந்த வெள்ளைக்காரப் பெண் வீணை வித்துவானைப் பற்றிக் கூறிய வரலாற்றையும், அவன் விஷயமாக தான் செய்திருந்த வாக்குறுதியையும் துரைராஜா மைனரிடத்தில் சொல்லாமல் மறைத்து விட்டான். மற்ற விவரங்களைக் கேட்ட மைனர் புரளியாக நகைத்து, “சே! இவ்வளவுதானா! மலை கல்லி எலி பிடித்தாய் போலிருக்கிறது. கடைசியில், இன்றையப் பொழுது வீணாகப் போய்விட்டது. கேவலம் ஒரு முத்தத்துக்குக் கூடப் பஞ்சமாகப் போய்விட்டது. நானாய் இருந்தால், தோட்டத்துக்குள் தனியாக வந்த அந்தப் பெண்ணை இவ்வளவு எளிதில் விட்டிருப் பேன் என்று பார்த்தாயா? உண்டு இல்லை என்று ஒருகை பார்த்தே விட்டிருப்பேன் என்று கூறினான்.

துரைராஜா:- “உன்னுடைய சாமர்த்தியம் எனக்கு வரவே வராது. அது போகட்டும்; என்னைவிட்டுப் போன பிறகு, நீ யார் யாரைப் பார்த்தாய்? நம்முடைய ஜனங்கள் யாரையாவது கண்டாயா?”

என்று பேச்சை மாற்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/53&oldid=646287" இலிருந்து மீள்விக்கப்பட்டது