பக்கம்:மதன கல்யாணி-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதன கல்யாணி

தங்களிடத்தில், கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவர் எங்கேயோ . அவசரமாகப் போக வேண்டுமாம். பல் தேய்த்துவிட்டு உடைகளைப் போட்டுக் கொண்டு பிரமாணமாக இதோ ஐந்து நிமிஷத்தில் வருகிறேன் என்று சொல்லி என்னை அனுப்பினார்” என்றாள்; “சரி, வரட்டும். அவரோடு நான் ஒரு ரகசியமான சங்கதியைப் பற்றிப் பேச வேண்டும். ஆகையால், அவர் வந்தவுடனே நீ வெளியில் போய் இருந்துவிட்டு அவர் போனவுடனே திரும்பி வா தெரிகிறதா?” என்றாள் கல்யாணியம் மாள். அதைக் கேட்ட தாதி, அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டாள். அதன் பிறகு அந்தப் பணிமகள் தனது எஜமானி யம்மாளது விருப்பத்தின்படி, பக்கத்தில் உட்கார்ந்து, தலையை மெதுவாகப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவ்வாறு கால் நாழிகை நேரம் கழிந்தது. மைனர் துரை தன்னை மிக்க ஆடம்பரமாக அலங்கரித்துக் கொண்டு, தனது அன்னை இருக்கும் இடமாயிற்றே என்ற அச்சம் சிறிதுமின்றி, டம்பாச்சாரி நடை நடந்து, உள்ளே நுழைந்தான். அவன் வந்ததைக் கண்டவுடன், தாதி கட்டிலை விட்டு மிகவும் பணிவாகக் கீழே இறங்கி மெதுவாக வெளியிற் போய்விட்டாள். அப்போது கட்டிலிற்கருகில் வந்த மைனர், தனது தாய் தேக அசெளக்கியத்தோடு படுத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டானாகிலும், சிறிது இரக்கம் கொள்ளாமலும், அனுதாபம் காட்டாமலும், மிக்க அசட்டையாக அப்புறம் பார்த்த வண்ணம் சற்று தூரத்தில் கிடந்த சொகுசான ஒரு பெருத்த சாய்வான நாற்காலியில் உட்கார்ந்து, “அப்பாடா’ என்று சாய்ந்து, தனது தாய் படுத்திருந்த மஞ்சத்தின் பக்கமாக தனது கால்களை நீட்டிவிட்டான். அவன் உட்கார்ந்து கொண்ட நாற்காலி, கல்யாணி யம்மாள் தனக்காகவே செய்து, தான் மாத்திரம் உட்கார்ந்து வந்த சிம்மாசனம் போன்ற ஒரு சிறந்த நாற்காலி, அதன் கம்பீரத்தைக் கண்டு, அதன் மேல் உட்கார்ந்து கொள்ள எவரும் அஞ்சுவார்கள். துரைஸானியம்மாள், மைனர் முதலிய சகலமானவர்களும், அதுகாறும் அந்த நாற்காலியில் உட்கார்ந்ததே இல்லை. அப்படிப் பட்ட மரியாதையான உன்னத ஆசனத்தில் மைனர் வழக்கத்திற்கு மாறாக உட்கார்ந்ததையும், தான் தேக அசெளக்கியமாக இருந்ததைக் கண்டும், அவன் சிறிதும் ஜீவகாருண்யமற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/56&oldid=646292" இலிருந்து மீள்விக்கப்பட்டது