பக்கம்:மதன கல்யாணி-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மதனகல்யாணி

கொடுத்து, அவளுக்கு வேண்டிய செளகரியங்களை எல்லாம் செய்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வந்த நீங்கள், அதன்பிறகு அவள் இருக்கிறாளோ இறந்து போய்விட்டாளோ என்பதைக்கூட நினையாமல் பேசாதிருந்து விட்டீர்களே! இது தான் நாணயமோ? பிள்ளைக்கும் பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் புஸ்தக நிதி எல்லாம், உங்களுடைய சொந்த விஷயத்தில் மாத்திரம் விலக்கு போலிருக்கிறது. ஆனால் நீங்கள் இப்படி கெளரதைக் குறைவாக நடந்து கொண்டாலும் நான் உங்களைக் காட்டிக் கொடுக்காமல், அவளுக்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் செய்து விட்டேன். மைலாப்பூரில் உள்ள ஒரு பங்களாவை மாசம் ஒன்றுக்கு 250-ரூபாய் வாடகைக்குப் பேசி, அதில் அவளைக் கொண்டு போய் வைத்து, அவளுக்கு வேண்டிய ஆள்மாகாணங் களையும் ஏற்பாடு செய்துவிட்டேன். பங்களாவுக்கு அறுமாசத்து வாடகைப் பணம் முன்னால் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருக் கிறேன். அதற்காக 1500-ரூபாய் வேண்டும். அவளுடைய முதல் மாசச் சம்பளமாகிய ஐயாயிரம் ரூபாயை இப்போதே கொடுக்க வேண்டும்; தவிர, அவளுக்கு வேண்டிய ஒரு பீடனும் இரண்டு குதிரைகளும் வேண்டும். அவைகள் 1500-ரூபாய் ஆகும். இன்னமும் உள்ள சில்லரைச் செலவுகளுக்காகவும் என்னுடைய சொந்தச் செலவுகளுக்காகவும் 2000-ரூபாய் வேண்டும். இவைகள் எல்லாம் சேர்ந்து பதினாயிரம் ரூபாய் ஆகின்றன. இப்போது கணக்கு சரிதானா? இந்த அற்பத் தொகைக்கே இப்படி மூக்கால் அழுதால், பத்திரத்தின் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் 25-ஆயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கிக் கொடுக்க வேண்டுமே, அதற்கு என்ன சொல்லுவீர்களோ தெரியவில்லையே!” என்று புரளியாகப் பேசினான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “ஆகா! அப்படியா தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுமில்லை உரையுமில்லை என்பார்கள். அதைப் போல இருக்கிறது உன்னுடைய காரியம். ஒவ்வொரு குடியானவனும் வருஷம் முழுவதும் தன்னுடைய உடம்பை சாறாகப் பிழிந்து பாடுபட்டு நிலத்திலிருந்து எடுக்கும் வருமானத்தில் பெரும் பாகத்தை நம்மிடத்தில் கொட்டிக் கொடுத்து விட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/58&oldid=646296" இலிருந்து மீள்விக்கப்பட்டது