பக்கம்:மதன கல்யாணி-2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மதன கல்யாணி

குதிரையின் அங்க அடையாளங்களையும், மூட்டைக்குள்ளிருந்த பொருட்களின் விபரங்களையும் நன்றாகக் கேட்டு, அவர்களது வாக்குமூலங்களை வாங்கிக்கொண்ட பின், பிணங்களை வைத்திய சாலைக்கு அனுப்பிவிட்டு, அவர்களைப் பெட்டிவண்டியில் ஏறிக் கொள்ளச் செய்தார். அதன் பிறகு சப் இன்ஸ்பெக்டர் தமது கத்தி, துப்பாக்கி முதலியவற்றை எடுத்துக்கொண்டு, ஆயுதபாணிகளான வேறு நான்கு ஜெவான்களையும் அழைத்துக்கொண்டு, வழிப்பறி நடந்த இடத்திற்குப் பெட்டிவண்டியை ஒட்டும்படி செய்து தாமும் ஜெவான்களோடு அந்த இடத்திற்கு வந்தார். சிவஞான முதலியாரும், வண்டிக்காரனும் கீழே இறங்கி, எந்தெந்த இடத்தில் என்னென்ன காரியம் நடந்ததென்பதை நன்றாகக் குறித்துக் காட்டினர். அவ்வளவோடு திருப்தியடைந்த சப் இன்ஸ்பெக்டர், அவர்கள் தங்களது ஊருக்குப் போகலாமென்றும், மாஜிஸ்டிரேட்டு அவர் களுக்கு உத்தரவு அனுப்பும்போது ஆஜராகி, தம்மிடத்தில் வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்றும் கூற, சிவஞான முதலியார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டதன்றி, தாங்கள் தனிமையில் ஊருக்குப்போக அஞ்சுவதால் தங்களோடு சில உஜெவான்களையும் பந்தோபஸ்தாக அனுப்பும்படி கேட்டுக் கொள்ள, சப் இன்ஸ்பெக்டர், அவர்களோடு இரண்டு ஜெவான் களை அனுப்பிவிட்டு, மூட்டையை எடுத்துக்கொண்டு போன வேஷதாரியின் குதிரைக் குளம்படியைப் பின்பற்றியபடியே போய் அவர் யாரென்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, சைதாப்பேட்டைப் பக்கமாக நடந்தார். பெட்டி வண்டி விடியற்காலம் ஐந்து மணிக்கு மாரமங்கலம் சமஸ்தானத்து பங்களாவின் வாசலில் வந்து நின்றது. சிவஞான முதலியார் கல்யாணியம்மாளை இறங்கச் செய்து, தாம் அன்று பகலில் மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டு, பெட்டிவண்டி யோடு தமது ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தார்.

கல்யாணியம்மாள் அதிக சந்தடி செய்யாமல் பங்களவிற்குள் நுழைந்து தனது அந்தப்புரத்தை அடைந்தாள். அவள் அந்த இரவு முழுதும், பட்டபாடுகளினால் களைத்துப்போய் முற்றிலும் தளர்ந்து சோர்வடைந்தவளாய், தனது கட்டிலின் மேல்

உட்கார்ந்து அப்பாடா என்று படுத்தாள். இரண்டு நாட்களாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/6&oldid=646300" இலிருந்து மீள்விக்கப்பட்டது