பக்கம்:மதன கல்யாணி-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57

தில் வந்து கேட்பானா? அடாடா! பெற்றாலும் பெற்றேன், உலகத்தில் எவருக்கும் கிடைக்காத மணியான பிள்ளையைப் பெற்றேன். இம்; சரி; தம்பி போ; போ; இன்று மறுபடியும் நிச்சய தாம்பூல முகூர்த்தம் வைத்திருக்கிறது. நீ உண்டாக்கியிருக்கிற இத்தனை துன்பங்களினிடையில் அதை எப்படி நடத்துகிறது. கண்மணியம்மாளைக் கட்டிக்கொள்ள உனக்கு மனமில்லை என்றும், நீ ஒரு தாசியை வைத்துக் கொண்டிருப்பதாகவும், மீனாகூஜியம்மாளுக்கு நான் கடிதம் எழுதி அனுப்பி விடுகிறேன். பாவம் அவர்கள் நம்மை நம்பி இருந்து அந்தக் குழந்தையை வேறு எங்கேயாவது கட்டிக் கொடுப்பதையும் கெடுத்துக் கொண்டால், அதனாலும் நம்க்குப் பல துன்பங்கள் வந்து சேரும். அப்படியே சொல்லி அனுப்பிவிடலாம் அல்லவா? உனக்கு ஆக்ஷேபனை ஒன்றுமில்லையே?” என்றான்.

மைனர் மறுபடியும் கல்யாணியம்மாளைப் பழிப்பவன் போலத் தனது வாயைக் கோண வைத்துக் கொண்டு, “ஓகோ என்னால் தான் இத்தனை துன்பங்களும் வந்தனவோ! கண்மணியை இப்போதே கட்டிக்கொள்ள சம்மதம் என்று நான் அன்றைய தினம் சொன்ன போது இன்னம் ஒரு வருஷத்துக்குப் பிறகு தான் செய்ய வேண்டும் என்றும், அதுவரையில் நான் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும் என்றும் சொல்லி அடம்பிடித்தது யார்? அன்றைக்கே என்னுடைய பேச்சைக் கேட்டிருந்தால், எனக்கு இந்த பாலாம்பாளுடைய சிநேகம் ஏற்பட்டிருக்கா தல்லவா? முதலில் மறுத்துவிட்டு, நான் இல்லாத காலத்தில் இவ்வளவு சீக்கிரமாக உங்களை யார் நிச்சயதாம்பூல முகூர்த்தம் வைக்கச் சொன்னது? ஆகையால் இத்தனை துன்பங்களுக்கும், இந்த முகூர்த்தம் நின்றதற்கும் நீங்களே காரணமானவர்களன்றி நானல்ல. என்னுடைய தகவலின்றி நீங்கள் முகூர்த்தம் வைத்தீர்கள் அல்லவா, அதைப் போலவே என்னுடைய தகவலின்றியே நிச்சய தாம்பூல முகூர்த்தம், கலியாணம், சாந்தி முகூர்த்தம் முதலிய எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளுங்களேன்? உங்களை யார் தடுத்தது? நான் அந்தக் கண்மணியின் மேல் எவ்வளவோ பிரியம் வைத்திருந்தேன். அவளிடத்தில் சந்தோஷமாகப் பேச வேண்டும் என்று நான் எவ்வளவு காலமாகப் பிரயத்தனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/61&oldid=646303" இலிருந்து மீள்விக்கப்பட்டது