பக்கம்:மதன கல்யாணி-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மதன கல்யாணி

பட்டேன். அவள் என்னைக் கண்டால், பூனையைக் கண்ட எலியைப் போல, வாயை மூடிக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டாள். இருந்தாலும் அவளுடைய அற்புதமான அழகைக் கருதி, என்னுடைய பிரியம் மாத்திரம் மாறாதிருந்தது. இப்போது என்னுடைய மனம் மாறிவிட்டது. இந்த பாலாம்பாள் கண் மணியைவிட அழகிலோ ஆயிரம் மடங்கு மேலானவள்; அவளுடைய நல்ல குணமோ அபாரமானது. அவள் என்மேல் வைத்திருக்கும் பிரியமோ அளவிலடங்காததாக இருக்கிறது. அப்படிப்பட்ட உத்தமமான ஸ்திரீயை வஞ்சிக்க எனக்கு மனமில்லை. அவளே எனக்குப் போதுமானவள். கண்மணியின் விஷயத்தில் நீங்கள் எப்படியாவது செய்து கொள்ளலாம். எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். பணம் பெயருமா பெயராதா? அதையும் சொல்லி விட்டால் நான் போகிறேன். பாலாம்பாளே வக்கீல் மூலமாக நோட்டீஸ் விட்டால், பணம் தானாகவே அவளுடைய வீட்டைத் தேடி ஓடி வருகிறது” என்று கூறிய வண்ணம் போக எத்தனிப்பவனைப் போல முறுக்காக எழுந்தான்.

அதைக் கண்ட கல்யாணியம்மாள் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு, மிகவும் அன்பான குரலில் அவனை நோக்கி, “தம்பி ஆத்திரப்படாதே போகலாம்; உட்கார்: உனக்கு நான் பணம் இல்லை என்று சொல்லுவேனோ? இந்த சமஸ்தானத்துக்கே, நாளைக்கு, நீ எஜமானாகப் போகிறவன். என்னிடத்திலுள்ள சொத்துக்கள் எல்லாம் உன்னைச் சேர்ந்தவை; உனக்குக் கொடுக் காமல், இவ்வளவு பொருளையும் நான் என்ன செய்யப் போகிறேன். நீ என்னவோ அவளுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டாய்; உனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து உன்னை விடுவிக்க வேண்டும் என்னும் கருத்தோடு நாங்களும் அதில் கையெழுத்துப் போட்டு விட்டோம். இப்போது அவளும் உன் வசத்தில் வந்துவிட்டாள்; அவளுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தொகைகளையும் நாம் இப்போது கொடுத்துவிடலாம்; அதைப் பற்றியும் நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நான் இப்போது உன்னிடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே உன்னை வரவழைத்தேன். நீ அவளுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தாயே? அதை அவளுடைய சம்மதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/62&oldid=646305" இலிருந்து மீள்விக்கப்பட்டது