பக்கம்:மதன கல்யாணி-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59

மேல் அங்கேயே எழுதிக் கொடுத்தாயா? அல்லது அவளுடைய சம்மதி இல்லாமல் நீயே அதை எழுதிக் கொடுத்தாயா?” என்றாள்.

மைனர்:- ஏன்? அவளுடைய சம்மதியின் மேலே தான் நான் அவளுக்கெதிரில் எழுதிக் கொடுத்தேன்.

கல்யாணி:- அப்படியா அதை நீயே எங்கிருந்தோ எழுதிக் கொணர்ந்து கொடுத்ததாகவும், அவள் அதை ஒப்புக் கொள்ள வில்லை என்றும் சொன்னாளே!

மைனர்:- அவள் யெளவனப் பெண்ணல்லவா வெட்கத்தினால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதனால் குடி முழுகிப் போய் விட்டதோ.

கல்யாணி:- அப்படியானால், அங்கே வந்த திருடர்கள், தாமாகவே வந்தார்களா? அல்லது உன்னுடைய துண்டுதலின் மேல் வந்தார்களா?

மைனர்:- நன்றாக இருக்கிறதே சங்கதி! நான் அவளோடு சந்தோஷமாக இருந்த போது, திருடர்கள் தாமாக வந்தார்கள். நான் மெத்தையின் கீழே அகப்பட்டுக் கொண்டேன். அதன் பிறகு வந்த போலீஸ்காரர்கள் நான் தான் திருடனென்று தவறுதலாக என்னைப் பிடித்துக் கொண்டார்கள், அந்தச் சமயத்தில் பாலாம்பாள் மூர்ச்சித்துக் கிடந்தாள் ஆகையால், அவள் என்னை அப்போதே விடுவிக்கக்கூடாமல் போய்விட்டது. மறுநாள் அவளே தானாக வந்து என்னை விடுவித்திருப்பாள். அதற்குள் நீங்கள் போய் பத்திரத்தில் கையெழுத்துச் செய்ததும் அல்லாமல், அநாவசியமான பல துன்டங்களை எல்லாம் நீங்களே உண்டாக்கிக் கொண்டீர்களே. கல்யாணி:- அப்படியா சங்கதி! அவள் என்ன சொன்னாள் தெரியுமா? நீ பத்திரம் எழுதிக் கொடுத்ததற்கும் அவள் இணங்க வில்லையாம். அதன்மேல், நீ கோபங்கொண்டு வெளியில் போய், திருடர்களை அழைத்து வந்து, எல்லாரையும் அடித்துப் போட்டு விட்டு, அவளைப் பலவந்தமாகக் கட்டித் துக்கிக்கொண்டு போக

முயன்றதாக அல்லவா அவள் சொன்னாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/63&oldid=646307" இலிருந்து மீள்விக்கப்பட்டது