பக்கம்:மதன கல்யாணி-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75

செய்ததே இல்லை. இந்தக் கலியாணத்தை மாத்திரம் நான் அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக, ஒரு வருவும் முன்னாகவே நடத்த எத்தனிப்பது, அவர்களுக்கு இஷ்டமில்லா மையால், இப்படிப்பட்ட அபசகுனம் ஏற்பட்டதோ என்ற ஒரு சந்தேகம் என் மனசில் எழுந்து போராடுகிறது. நிற்க, எங்களுடைய சமஸ்தானத்துக் குழந்தைகளுடைய கலியானம் எல்லாம் ஆதி காலந்தொட்டு மாரமங்கலத்தில் உள்ள பூர்வீகமான அரண்மனை யிலேதான் நடப்பது வழக்கம்; அதற்கு மாறாக, நாம் நிச்சய தாம்பூல முகூர்த்தத்தை இந்த ஊரில் வைத்துக் கொண்டிருப்பது பற்றி இப்படிப்பட்ட இடைஞ்சல் உண்டாகி இருக்கிறதோ என்ற எண்ணமும் என் மனசில் எழுந்து சங்கடப்படுத்துகிறது. ஆகையால், நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை, இன்றைய தினம் நடத்தாமல் ஒத்தி வைக்க நினைத்து விட்டேன்.

என்னுடைய உடம்பு செளக்கியம் அடைந்தவுடனே, நாம் இருவரும் மறுபடி நேரில் சந்தித்துக் கலந்து பேசி, எது உசிதமான காரியமோ அதைச் செய்து கொள்ளுவோம். இந்தக் கலியாணத்தை இந்த வருஷத்தில் செய்யலாமா என்பதைப் பற்றி திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்து, அதன்படி நடந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மதுரை ஜில்லாவில் உள்ள ராமலிங்கபுரம் சமஸ்தானத்து ஜெமீந்தாருடைய மூத்த குமாரருக்கு, துரைஸானியம்மாளைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கடிதங்களின் மூலமாகவும் மனுஷ்யாள் மூலமாகவும் பிரஸ்தாபம் செய்கிறார்கள். ஜாதகப் பொருத்தம் நன்றாக இருக்கிறது; அந்த இடமும் நல்ல சிரேஷ்ட மான இடம்; மனிதர்களும் நற்குண நல்லொழுக்கமுடையவர்கள்; ஆகையால் துரைஸானியம்மாளுக்கு அந்த இடம் திகைந்த மாதிரியே வைத்துக் கொள்ளலாம். கோமளவல்லிக்கும் சில இடங் களிலிருந்து ஜாதகங்கள் வந்திருக்கின்றன. அவளுக்கும் ஏதாவது ஒர் இடம் குதிர்ப்பாடு ஆகலாம் என்று நம்பி இருக்கிறேன். ஆகையால், ஈசுவர கிருபையை முன்னிட்டு இந்த மூன்று முகூர்த் தங்களையும் ஒன்றாகவே, மாரமங்கலம் அரண்மனையில் அதிசீக்கிரத்தில் நடத்தி விடலாம் என்று பரிபூரணமாக நம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/79&oldid=646337" இலிருந்து மீள்விக்கப்பட்டது