பக்கம்:மதன கல்யாணி-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மதன கல்யாணி

பெரும் படங்களும், நிலைக்கண்ணாடிகளும் இருந்தன. அவளது கண்கள் தட்டியிடுக்கின் வழியாக ஒரு நிலைக்கண்ணாடியை நோக்கின. அப்போது அந்த நிலைக்கண்ணாடிக்குள், ஒரு விபரீதமான காட்சி தென்பட்டது; அந்த அக்கிரமக் காட்சியைக் கண்டவுடன், கல்யாணியம்மாளது தேகம் பதறிப் போய்விட்டது. கோவெனக் கூச்சலிட வேண்டும் என்ற ஒர் உணர்வு அவளது மனதில் உண்டாயிற்று; ஆனால் அவள் அதை அடக்கிக் கொண்டாள். அவளது மனதில் கரைகடந்த கோபமும், விசனமும் பொங்கி எழுந்தன. அப்படிப்பட்ட விபரீதமான காரியமும் நடக்குமோ என்ற ஓர் அவநம்பிக்கையில், அவள் தனது கண்களையே நம்பாமல் சிறிது நேரம் தத்தளித்தாள். அந்த அசங்கியமான காட்சியைப் பார்ப்பதற்கே, அவளது உடம்பு வெட்கிக் குன்றியதாயினும், அவள் அங்கே என்ன நடக்கிற தென்பதைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.

நிலைக்கண்ணாடி இருந்த சுவருக்கு எதிர்பக்கத்துச் சுவரின் ஒரமாகக் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த துரைஸ்ானியம்மாள், அந்த அறையின் வழியாகச் சென்ற மோகனரங்கனைப் பார்த்தவுடன், புஸ்தகத்தை நாற்காலியில் வைத்துவிட்டு எழுந்து நின்று, அவனைப் பார்த்து, “இங்கே வா போகலாம்; ஒரே நிமிஷம்” என்று ரகசியமாகப் பேசிக் கைஜாடை காட்டி வற்புறுத்தி அழைக்க, அவன் புன்னகை செய்து நாணிக் கோணி, பக்கத்து அறையில் கல்யாணியம்மாள் இருக்கிறாள் என்றும், தான் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவசரமாகப் போக வேண்டும் என்றும், தனது கை ஜாடையால் காட்டி, ஓங்கிப் பேச வேண்டாம் என்று, தனது கையால் வாயைப் பொத்திப் பொத்திக் காட்டிய வண்ணம், மிகுந்த அச்சத்தோடு கதவின் பக்கமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம், தயங்கி நிற்க, துரைஸானியம்மாள், தனது மோக விகாரத்தைத் தாங்கமாட்டாமல், ஆவேசம் கொண்டவளைப் போலத் துடிதுடித்தவளாய், முன்னிலும் அதிகமாக வற்புறுத்தி, ‘அம்மாள் இருந்தால் இருக்கட்டும்; அம்மாளிடத்தில் எனக்கு பயமில்லை; வா போகலாம்” என்று மிகவும் தணிவான குரலில் அழைத்த வண்ணம் அவனை நோக்கி இரண்டோரடி எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/82&oldid=646345" இலிருந்து மீள்விக்கப்பட்டது