பக்கம்:மதன கல்யாணி-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79

வைக்க அந்த யெளவனப் புருஷன், அவளது மோகனாஸ்திரங் களினால் தாக்கப்பட்டு உணர்வு கலங்கி மெய்ம்மறந்தவனாய், ஏதோ பிதற்ற, அவனது உடம்பு, காந்தத்தினிடம் செல்லும் இரும்பு போலத் தானாகவே அவளை நோக்கிச் சென்றது.

அடுத்த நொடியில் துரைஸ்ானியம்மாள் ஒரே பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்து, தனது முழு ஆவலையும் புலப்படுத்தி, அவனைக் கட்டி ஆலிங்கனம் செய்து, அவனது முகத்தில் ஒயாமல் முத்தமிட்டு, “ஆகா! என்ன சுகம் என்ன சுகம் உன்னை விட்டுப் பிரியாமல், சதாகாலமும் உன்னோடு இப்படியே சுகமது வித்திருக்கும் காலம் எப்போது வருமோ தெரியவில்லையே! என் கண்ணாளா! என் துரையே! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்! அம்மாள் கண்டு கொள்ளப் போகிறாள் என்று பயப்படுகிறாயோ? அவளைப்பற்றி நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம். அதற்கு நான் இருக்கிறேன். நேற்று வந்ததைப் போல, இன்றைக்கும் நீ அவசியம் என்னுடைய அந்தப்புரத்துக்கு வரவேண்டும். வராமல் இருந்துவிடாதே; தெரிகிறதா? இந்தக் கடிதத்தில் நீ என்ன எழுதினாய் என்பதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு எவனையோ பிடித்துக் கலியாணம் செய்து வைக்கப் போகிறார் களாம். அதற்குள் நாம் இருவரும் ரகசியமாகப் புறப்பட்டு எங்கே யாவது ஒடிப்போக வேண்டும். அந்த விஷயமாக இன்று பேசி முடிவு கட்டவேண்டும். ஆகையால் நீ அவசியம் வந்து சேர்” என்று மிகவும் உருக்கமாகக் கூறி, அவனைப் பிடித்துக்கட்டி உருட்டிக் கசக்கி மர்த்தனம் செய்ய, அவன் தேனில் வீழ்ந்த ஈயைப் போல மதிமயங்கிக் கிடந்து தவிக்க, அவ்வாறு ஐந்து நிமிஷ நேரம் கழிந்தது; அதன் பிறகு பையன் தனக்கு நேரமாகிற தென்பதை உணர்ந்து வற்புறுத்தி தன்னை விடுவித்துக் கொண்டு, அவ்விடத்தை விட்டு அப்பால் போய்விட்டான்.

அதன் பிறகு துரைஸானியம்மாள், முன் போல புஸ்தகமும் கையுமாக நாற்காலியில் உட்கார்ந்து, மிகவும் ஏங்கிய முகத்தோடு, மோகனரங்கன் போன திக்கையே நோக்கிய வண்ணம் உட்கார்ந் திருந்தாள்.

un.65.Hi-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/83&oldid=646347" இலிருந்து மீள்விக்கப்பட்டது