பக்கம்:மதன கல்யாணி-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81

வயிற்றிற் பிறந்த குழந்தை இப்படியா கெட வேண்டும். அந்தக் கோமளவல்லி எப்படிப்பட்ட காரியத்தில் இறங்கி இருக்கிறாளோ தெரியவில்லையே! இவள்தான் இப்படி அநியாயமாகக் கெட்டுப் போய் விட்டாள். கோமளவல்லியை யாவது நான் இனி மிகவும் ஜாக்கிரதையாக வைத்துக் காக்க வேண்டியதன்றி இருவரையும் அதிசீக்கிரத்தில் எவனுக்காகிலும் கட்டிக்கொடுத்து அவனிடம் ஒப்புவித்து விடுவதே உத்தமமான காரியம்; இவளிடத்தில் நான் இப்போது போய் என்னுடைய அதிகாரத்தையும் கோபத்தையும் காண்பித்தால், இவள் தாறுமாறாகப் பேசுவாள். இன்னமும் இருக்கும் சொற்ப மதிப்பும் போய்விடும். ஆகையால், நான் இந்த விஷயத்தை அறிந்து கொண்டதாகவே இவளிடத்தில் காட்டிக் கொள்ளாமல் இருந்தே, காரியத்தைச் சரிப்படுத்த வேண்டும்; முதலில் இந்த மோகன ரங்கனை வேலையைவிட்டு நீக்கி அனுப்பிவிட வேண்டும். அப்படி அனுப்புவதையும் சந்தேகத் துக்கு இடம் இல்லாமல் ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். ஏனென்றால், இவள் மிகுந்த பிடிவாத குணம் உடையவள்; இவளும் இந்த வீட்டை விட்டு, அவனோடு கூடவே போய் விடுகிறேன் என்று சொன்னாலும் சொல்லுவாள்” என்று கல்யாணியம்மாள் தனக்குள் ஒருவித முடிவு செய்து, தனது கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு, கரைகடந்த துயரக்கடலில் ஆழ்ந்தவளாய், ஜன்னலை விட்டு மெல்ல நடந்து கட்டிலை நோக்கி வந்தாள்.

பலவகையான விபத்துகளும், துன்பங்களும் தன்னை நான்கு பக்கங்களிலும் வளைத்துக் கொண்டு தான் தலை துக்க முடியாமல் அடித்து ஓயாமல் சித்திரவதை செய்கின்றனவே என்ற நினை வினால் கல்யாணியம்மாள் நரக வேதனை அடைந்தவளாய், தனது கட்டிலின் மேல் ஏறி உட்கார்ந்து சிறிது நேரம் யோசனை செய்தபின், வெளியில் நின்ற வேலைக்காரியின் பெயரைச் சொல்லி அழைக்க, அவள் உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்ட கல்யாணியம்மாள், “அடீ; நீ போய் பொன்னியம்மாளை வரச்சொல்” என்றாள். உடனே அந்தப் பணிமகள் வெளியிற் செல்ல, அரைக்கால் நாழிகை நேரத்தில் பொன்னம்மாள் வந்து சேர்ந்தாள். கல்யாணியம்மாள் அவளை நோக்கி, “அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/85&oldid=646350" இலிருந்து மீள்விக்கப்பட்டது