பக்கம்:மதன கல்யாணி-2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மதன கல்யாணி

அவ்வாறு இரண்டு மூன்று நாழிகை நேரம் கழிந்தது. சுந்தர விலாசத்தின் வாசற்கதவாவது, ஜன்னல் கதவுகளாவது திறக்கப் படுமோ என்று அவன் ஆவலோடு எதிர்பார்த்ததெல்லாம் அவமாயிற்று. அந்த வீடே துங்குவதைப் போல இருந்ததன்றி அதற்கு எவ்வித உயிரும் இருப்பதாகவே தோன்றவில்லை. துரைராஜாவின் கண்களும், பார்த்துப் பார்த்துப் பூத்துப் போயின. கழுத்தும் கைகால்களும் நோக ஆரம்பித்தன. அவன் திண்ணையை விட்டு எழுந்து கம்பிக்கும் திண்ணைக்கும் இடை வழியில், தெற்கு மேற்காக உலாவிய வண்ணம், சுந்தர விலாசத்தை கவனிக்கத் தொடங்கினான். அவ்வாறு, அவன் அந்த இடத்தில் நெடுநேரமாக இருப்பதையும், அவள் தக்க பெரிய மனிதருடைய வீட்டுப் பிள்ளையைப் போல இருந்ததையும் கண்ட பக்கத்து வீட்டுக்கார னொருவன், அங்கே வந்து துரைராஜாவை மிகவும் மரியாதையாக நோக்கி, “இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளப் போகிறீர் களோ?” என்று நயமாகக் கேட்க, உடனே துரைராஜா “ஆம், ஆம்; மைலாப்பூரில் உள்ள இதன் சொந்தக்காரரிடத்தில் இருந்து இதன் திறவுகோலை வாங்கிக் கொண்டு வரும்படி, ஒரு மனிதரை அனுப்பி இருக்கிறேன். அவர் திரும்பி வந்த உடன் உள்ளே போய்ப் பார்க்க வேண்டும். உள்ளே இடம் செளகரியமாக இருக்குமா? நீர் இந்த வீட்டுக்குள் எப்போதாவது போய்ப் பார்த்திருக்கிறீரா?” என்றான்.

அதைக் கேட்ட அண்டை வீட்டுக்காரன் மெல்ல நடந்து, குறட்டில் ஏறி, திண்ணைக்குச் சமீபத்தில் வந்து நின்று கொண்டு, “ஓ பார்த்திருக்கிறேன். உள்ளே இடம் வசதியாக இருக்கிறது. இந்தத் தெருவுக்குள் இரண்டே இரண்டு மெத்தை வீடுகள் தான் இருக்கின்றன. இதுவொன்று; அதோ எதிரில் தெரிகிறதே சுந்தர விலாசம் அது ஒன்று. இது மெத்தை வீடு என்கிற ஏதுவை வைத்துக் கொண்டு இதன் சொந்தக்காரர். இதற்கு 95-ரூபாய் வாடகை ஏற்படுத்தி இருக்கிறார். அவ்வளவு ரூபாய்க்கு உள்ளே இடமில்லை. இதனுடைய சொந்தக்காரரான சமரபதி முதலியார் என்பவர் மகா பேராசை பிடித்தவர்; வாடகைத் தொகையை மூன்று மாசத்துக்கொரு தரம் அவர் ஏற்றிக்கொண்டே போகிறார். அப்படி இருந்தும் யாராவது பெரிய மனிதர்கள் வந்து விடுகிறார்கள்” எனறான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/88&oldid=646355" இலிருந்து மீள்விக்கப்பட்டது