பக்கம்:மதன கல்யாணி-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மதன கல்யாணி

அண்டை வீட்டுக்காரன், “நான் கேள்வியுற்றவரையில் சொல்லுகிறேன். ஆனால் அது எவ்வளவு தூரம் நிஜமோ என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் (மிகவும் தணிவான குரலில்) அவன் எங்கே இருந்தோ ஒரு பெண்ணைக் கொண்டு வந்து ரகசியமாக உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறானாம்; அந்தப் பெண்ணின் அழகுக்கு இந்த பூலோகத்திலேயே, இணை இருக்காதாம். அவள் ஏதோ ஒரு தேசத்து மகாராஜனுடைய மகளாம். அழகில் இவனும் சுந்தர புருஷன். இவன் வினை சொல்லிக் கொடுக்கப் போன இடத்தில் அந்தப் பெண் இவன் மேல் மோகங்கொண்டு இவனோடு ஓடிவந்து விட்டாளாம். பெண் தியைப் போல இருக்கிறாளாம்; அவளுடைய உடம்பு மெருகு கொடுத்த பத்தரைமாற்றுத் தங்கம் போல இருக்கிறதாம். அவளும் இவனும் உடல் இரண்டும் உயிர் ஒன்றுமாக இருக்கிறார்களாம்” என்றான்.

அதைக் கேட்ட துரைராஜாவின் முகம் சடக்கென்று மாறுபட்டது. உலகிலுள்ள அழகான ஸ்திரிகளை எல்லாம் அனுபவித்தவன் தான் ஒருவனே என்று அவன் அதுகாறும் நினைத்திருந்தவன் ஆதலால், துரைராஜாவின் மனதில் பெருத்த பொறாமை உண்டாயிற்று. கேவலம் மேளம் வாசிக்கும் இழிதொழிலுடைய ஒருவனுக்கு அப்படிப்பட்ட அபாரமான பாக்கியம் வாய்க்கலாமா என்ற ஓர் ஆத்திரமும் அவனது மனதில் பொங்கி எழுந்தது. ஆனால் அவன் தனது மன உணர்ச்சிகளை எல்லாம் வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டவனாய், அந்த மனிதனை நோக்கி, “அவள் வெளியில் வருகிறதுண்டா?” என்று நயமாக வினவினான்.

அண்டை வீட்டுக்காரன், “அவள் பகல் வேளையில் வருகிற தில்லை. இராக்காலங்களில் தான் வருகிறாள். அப்படி வரும்போது கோஷாஸ்திரியைப் போல கால் முதல் தலை வரையில் ஒருவித முடியால் அவள் தன்னை மறைத்துக் கொண்டு வருகிறாள். கண்களுக்கு மாத்திரம் இரண்டு துளைகள் விடப்பட்டிருக்கின்றன. அவள் எப்போதும் மோட்டார் வண்டியிலே தான் போய் வருகிறாள். அந்த வண்டியும் பெட்டி வண்டியைப் போல மூடுவண்டியாக இருக்கிறது. அதனால் தான் அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/90&oldid=646361" இலிருந்து மீள்விக்கப்பட்டது