பக்கம்:மதன கல்யாணி-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மதன கல்யாணி

இப்படிப்பட்ட அற்புதமான புத்திரனைப் பெற, கல்யாணியம்மாள் எவ்வளவு காலம் தவம் கிடந்தாளோ தெரியவில்லை. மார மங்கலத்தாருடைய குடும்பத்துக்கு அவனும், என்னுடைய குடும்பத்துக்கு துரைராஜாவும், குலத்தைக் கெடுக்க வந்த கோடாறிக் காம்புகளாக அமைந்திருக்கிறார்கள், கண்மணியம்மாள் மகா புத்திசாலி, நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவள். இவர் களுடைய அயோக்கியத்தனம் எல்லாம் அவளுக்குப் பிடிக்க வில்லை. என்ன செய்கிறது - என்றார்.

மதனகோபாலன்:- மெய்தான். இன்றைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிச்சயதாம்பூல முகூர்த்தத்திலிருந்து, தான் எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதைப்பற்றி என்னிடத்தில் கலந்து யோசனை செய்வதற்காகவே அவள் என்னை வரச்சொல்லி இருக்கலாம் என்று தாங்கள் அபிப்பிராயப்பட்டீர்களே இப்போது தான் முகூர்த்தம் நின்று போய்விட்டதே; நான் போகாமல் இருந்தால் என்ன அவள் சொல்வது போல அன்னியருடைய பங்களாவுக்குள் இருட்டு வேளையில் திருடனைப் போல நுழைவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லையே.

பசவண்ண:- மெய்தான். அவள் சொல்லுகிறபடி செய்வது சரியான காரியமல்ல; இருந்தாலும், இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. அன்றைய தினம் நீ அவளோடு பேசிக் கொண்டிருந்த போது, தான் வேறே ஒரு புருஷனைக் கட்டிக்கொள்ள ஆசைப் படுவதாக அவள் சொன்னாள் என்றாயே. அதை ஒரு வேளை அவள் இன்றைய தினம் உன்னிடத்தில் வெளியிடலாம். இந்த சந்தர்ப்பத்தில் நீ அவளைக் காணாவிட்டால், அவளை நீ இனிமேல் எப்போதும் பார்க்கக்கூடிய சமயமே நேராது. அவள் இந்தச் நுட்பமான விஷயத்தை வேறே எவரிடத்திலும் வெளியிட வெட்கப்படுவாள். ஆகையால் இன்று நீ அவசியம் போய், அவள் யாரைக் கட்டிக்கொள்ள ஆசைப்படுகிறாள் என்பதை அறிந்து கொண்டு, அவளுக்கு தைரியம் சொல்லி தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கும்படி அவளுடைய மனசை மாற்றிவிட்டு வந்து சேர்; அவளுடைய மனசைக் கவர்ந்திருக்கும் புருஷன் இன்னான் தான் என்ற ஒரு சந்தேகம் இப்போதே என் மனசில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/96&oldid=646371" இலிருந்து மீள்விக்கப்பட்டது