பக்கம்:மதன கல்யாணி-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93

உண்டாகிறது. இருக்கட்டும்; எல்லாவற்றிற்கும் நீ போய் அவள் சொல்வதை அறிந்து கொண்டு வந்து சேர் அதன் பிறகு ஆக வேண்டியதை நான் செய்கிறேன்.

மதனகோபாலன்:- சரி, அப்படியே செய்கிறேன். இப்போது மீனாகூஜியம்மாள் தங்களைப் பார்த்தால் இன்னார் என்று அடையாளங் கண்டுகொள்ள முடியுமா முடியாதா?

பசவண்ண:- முடியாதென்றே நினைக்கிறேன்; நான் அவர் களைப் பார்த்துப் பதினைந்து வருஷ காலத்துக்கு மேலாகிறது. அவள் என்னைப் பார்த்த காலத்தில், நான் மீசை தாடி முதலியவை இல்லாமல் சிறு பையனாக இருந்தேன்; இப்போது கிழவனைப் போல இருக்கிறேன். நான் தான் அவளுடைய தமயன் என்பதை, அவள் சுலபத்தில் கண்டு கொள்ள முடியாது. நான் பசவண்ண செட்டியார் என்ற பெயரோடேயே இன்னம் சொற்ப காலம் இருந்து சில முக்கியமான காரியங்களை முடிக்க வேண்டி இருக்கிறது. நானே வெளியிடுகிற வரையில், நீ இந்த சங்கதியைப் பற்றி எவரிடத்திலாவது அஜாக்கிரதையாக வார்த்தையை விட்டு விடப் போகிறாய்; ஜாக்கிரதை, ஆனால் கண்மணியம்மாளிடத்தில் மாத்திரம் நீ ஒரு கோடி காட்டிவை; இந்த மாரமங்கலம் மைனரை அவள் கட்டிக் கொள்வதில் எனக்குப் பிரியம் இல்லை என்றும், அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவளை நல்ல உயர்ந்த பதவியில் வைக்க வேண்டும் என்று நான் எண்ணி இருப்பதாகவும், உனக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன் என்று நீ அவளிடத்தில் சொல்லி, அவள் அதைரியப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு வா; தெரிகிறதா?

மதனகோபாலன்:- உத்தரவுப்படியே செய்கிறேன் - என்றான். அப்போது கடிகாரத்தில் மணி ஏழு அடித்தது. அதைக் கண்ட பசவண்ண செட்டியார், “சரி, மணி ஏழாகிவிட்டது; நீ புறப்பட்டுப் போ; எல்லாவற்றிற்கும் முன் எச்சரிக்கையாக, அவளுடைய கடிதத்தையும் சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக் கொண்டு போ எனக்கும் அந்தப் பக்கத்தில் ஒர் அலுவல் இருக்கிறது. நான் இன்னம் அரைநாழிகை கழித்து இங்கே இருந்து புறப்பட்டுப் போய் என்னுடைய காரியத்தை முடித்துக் கொண்டு அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/97&oldid=646373" இலிருந்து மீள்விக்கப்பட்டது