பக்கம்:மதன கல்யாணி-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95

அவளிடத்திலிருந்து அதிசீக்கிரத்தில் இன்னொரு கடிதத்தை எதிர்பார்க்கலாம் என்று துரைராஜா நினைத்து அளவளாவிான். அவனது மனதில் இன்னொரு யுக்தியும் தோன்றியது. தான் மதன கோபாலனைத் தொடர்ந்து சென்று, எவருக்கும் தெரியாமல் பின் புறமாக இருந்து, அவனது காலைப் பார்த்து சுட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்றும், சற்று நேரத்திற்குப் பிறகு தான் ஏதோ வேறு அலுவலை உத்தேசித்து அந்த வழியாகப் போகிறவன் போலத் திரும்பி வந்து அவனைத் துக்கியெடுத்து, அவனது விஷயத்தில் இரக்கமும் அனுதாபமும் காட்டி அவனை ஒரு வண்டியில் வைத்து அவனது வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான். ஏனெனில், அதனால் தனக்கு இரண்டு விதமான அனுகூலம் ஏற்படும் என்று அவன் எண்ணினான். அவனைச் சுட்டு வீட்டில் படுக்க வைப்பதனால் துரையம்மாளது கோரிக்கை நிறைவேறுவது முதல் அனுகூலம். அவனுக்கு வேண்டியவன் போல அவனது ஆபத்து வேளையில் உதவி அவனது வீட்டிற்குள் மறைந்திருக்கும் ஒப்புயர்வற்ற சுந்தர ரூபியான அந்தப் பெண்ணை தான் காணவும், அவளோடு சிநேகம் செய்யவும் சந்தர்ப்பம் வாய்ப்பது இரண்டாவது அனுகூலம் என்று துரைராஜா தன் மனதில் நவரத்னக்கோட்டை கட்டிக் கொண்டு மதனகோபாலனைத் தொடர்ந்து பின்னாகவே சென்றான். அந்த இரவு இருளடர்ந்ததாக இருந்தாலும், முனிசிபல் மின்சார விளக்குகள் பாதைகளிலெல்லாம் நிறைந்து பகல் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஆதலாலும், ஜனங்களும் அதிகமாக நடமாடிக் கொண்டிருந்தமையாலும், அவன் மதனகோபாலனுக்கு சமீபமாக நெருங்காமல் சிறிது பின்னாகவே வந்து கொண்டிருந் தான். மதனகோபாலனது மனதிலோ கண்மணியம்மாளது அற்புத வடிவமே நிறைந்திருந்தது. தனக்குப் பின்னால் ஒரு பாதகன் தன்னை வதைக்க வருகிறான் என்பதை அவன் சிறிதும் சந்தேகி யாமல் கண்மணியம்மாளது உயிரைக் காப்பாற்றுவதான மகா புண்ணியமான காரியத்தை தான் செய்ய வேண்டும் என்றும், அவளுக்குப் பற்பல ஆறுதல்களைக் கூறி அவளை சந்தோஷிப் பிக்க வேண்டும் என்றும் நினைத்து, அந்த இன்பத்தில் ஆழ்ந்தவ னாகச் சென்று கொண்டிருந்தான். வேறு எந்தப் பெண்ணிடத்தி

10.5.H-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/99&oldid=646377" இலிருந்து மீள்விக்கப்பட்டது