பக்கம்:மதன கல்யாணி-3.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 101 சேர்ந்து சார்ஜண்டு துரையின் கைநாடியைப் பிடித்துப் பார்த்து அவர் உயிரோடு தான் இருப்பதாகவும் ஆனால் மூர்ச்சித் துக் கிடப்பதாகவும் அறிந்து கொண்டார். அவரது முகத்தில் சில இடங்களில் இருந்து வழிந்த இரத்தத்தைத் தனது வஸ்திரத்தில் ஒற்றித் துடைத்துவிட்டு மதனகோபாலனும், ஜெமீந்தாரும் அவரைத் துக்கி எடுத்துக் கொண்டு தங்களது பங்களாவிற்குள் சென்றனர். சார்ஜண்டு துரை நன்றாக கொழுகொழுத்த கனமான தேகத்தை உடையவர் ஆதலால், அவரைத் தூக்கிக் கொண்டு போவதற்குள், அவர்கள இருவருக்கும் வேர்த்து விருவிருத்து இறைப்புண்டாகிவிட்டது. அவர்கள் இருவரும் பெரும்பாடு பட்டு அந்தத் துரையைச் சுமந்து கொண்டு போய் தனியான ஓர் அறையில் சொகுசாக இருந்த ஒரு மஞ்சத்தின் மேல் விடுத்தனர். அவர்கள் யாரோ ஒரு துரையை அவ்வாறு தூக்கிக் கொண்டு வந்ததைக் கண்டு மோகனாங்கியும் ஏனைய ஆட்களும் மிகுந்த அச்சமும் கவலையும் கொண்டவர்களாய் ஒடோடியும் வந்தனர். ஜெமீந்தார் அந்த துரை இன்னார் என்பதைப் பற்றிய விவரங்களை எல்லோருக்கும் சொன்னவராய், உடனே தண்ணிரும் விசிறியும் கொண்டு வரச் செய்தார். உடனே ஒர் ஆள் விசிறி கொண்டு வந்து துரையின் முகத்தில் விசிறத் தொடங்கினான். அவரது தலையில் நசுங்கிக் கிடந்த தொப்பியை எடுத்துவிடும்படி ஜெமீன்தார் சொலல, மதனகோபாலன் தொப்பியை விலக்கினான். விலக்கவே, அவர்களது ஆச்சரியமும் திகைப்பும் அளவிலடங்காதனவாகப் பெருகின. ஏனென்றால், வெள்ளைக்கார துரைகள் உச்சந்தலையில் அரை அங்குல நீளம் மயிரை வெட்டிவிட்டு, மற்ற பாகங்களை மழுங்கச் சிரைத்திருக்கும் வழக்கத்திற்கு மாறாக அந்த துரையின் தலையில் ஒரு பெண்பிள்ளையின் மயிர் போல நீண்ட கருத்த அழகிய தலை மயிர் வகிாந்து வாரிப் பின்னப்பட்டு, உச்சியில் அடை போல எடுத்துக் கட்டப்பட்டிருந்தது! அது என்ன அற்புதம் என்று நினைத்த அவர்கள, அநத துரை அவ்வாறு தலைமயிர் வைத்திருந்த காரணமென்ன என்பதை அறியமாட்டாமல் பிரமித்துப் போயினர். இருந்தாலும் மதனகோபாலன், ஒரு துணியில் தண்ணிரை நனைத்து அவரது முகத்தில் தடவ, இன்னொருவன் விசிறியால் வீசிக்கொண்டே இருந்தான். மதனகோபாலன் தண்ணிரை முகத்தில் விடவிட, முகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/105&oldid=853233" இலிருந்து மீள்விக்கப்பட்டது