பக்கம்:மதன கல்யாணி-3.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மதன கல்யாணி விஷயம் மாத்திரம் பெருத்த விந்தையாகத் தோன்றியது; என்னவெனில், கொலை, கூட்டுக்கொள்ளை முதலிய பெருத்த வழக்குகளில், முதலில் மாஜிஸ்டிரேட்டினது கச்சேரிகளில் ஒரு பிரதம விசாரணை நடப்பது வழக்கம்; அப்போது இரண்டு கட்சிகளின் சாட்சியங்களும் வெளியாவதோடு, இருதிறத்தாரும் வாதிப்பார்கள்; அதன்பிறகு மாஜிஸ்டிரேட்டு குற்றவாளியை விடுதலை செய்தாலும் செய்யலாம், அல்லது, மேல் நியாயஸ் தலமான ஜட்ஜி கோர்ட்டில் மறுபடியும் முடிவான விசாரணைக் காக அனுப்பினாலும் அனுப்பலாம். அந்த மேல் நியாயஸ் தலத்தில், மறுபடியும் அடியிலிருந்து எல்லா சாட்சிகளும் விசாரிக்கபபடுவார்கள். வாதங்களும் எதிர் வாதங்களும் நடை பெறும்; அதன் பிறகு ஜட்ஜி மரண தண்டனையோ அல்லது இதர தண்டனைகளையோ விதிப்பது சாதாரணமாக நடக்க வேண்டிய சட்ட முறை. அதற்கு மாறாக இந்த வழக்கு மாஜிஸ்டிரேட்டினால் ஒரு முறை விசாரிக்கப்படாமல் நேராக ஜட்ஜியினாலேயே விசாரிக்கப்படக் காரணம் என்ன என்பதும் அவாகளுக்குத் தெரியாமல் இருந்தது. அது எப்படி நேர்ந்ததென்பதை நாம் சுருக்கமாகச சொல்வது அவசியமாக இருக்கிறது. செனனை ஹைகோர்ட்டில் கிரிமினல் வழக்குகளை எல்லாம் விசாரிப்பதை வருஷத்தில் நானகு மாதங்களிலே தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாஜிஸ்டி ரேட்டினால முடிவான விசாரணையின் பொருட்டு ஜட்ஜிககு அனுப்பப்படும் வழக்குகள் பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்டு, நவம்பர் ஆகிய நான்கு மாதங்களிலே தான் ஜட்ஜியினால் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். மைனர் கொலைக் குற்றம் செய்த காலம் ஏப்ரல் மாதக் கடைசியாகையால், அந்த வழக்கை மாஜிஸ்டி ரேட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அதை முடித்து மேலே அனுப்புவதற்குள் ஏப்ரல் மாதம் முடிந்து போய்விடும் ஆதலால், ஜட்ஜி மனுச்செய்து அந்த வழக்கை அவரே நேராக எடுத்துக் கொண்டு அந்த ஏப்ரல்மாத செஷன்ஸிலேயே முடித்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறு கேடடுக் கொண்டதற்கு அவர்கள் பலவகையான காரணங்களும் காட்டினர். குற்றவாளி மிகுந்த தனவந்தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/128&oldid=853258" இலிருந்து மீள்விக்கப்பட்டது