பக்கம்:மதன கல்யாணி-3.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 137 பா. குரோட்டன்:- ஐயா! நான் கேட்ட முக்கியமான சில கேள்வி களுக்குப் பதில் சொலல முடியாதென்றும், இஷ்டமில்லை என்றும் நீர் சொல்லுகிறீர். அதனால், உம்முடைய நடத்தையைப் பற்றி மிகவும் கேவலமான யூகங்கள் செய்ய இடமுண்டாகும். நீர் உண்மையை வெளியிட்டுவிட்டால், உம்மைப்பற்றி எவ்விதச் சந்தேகமும் கொள்ள இடம் ஏற்படாது. அதைக் கவனித்துப் பதில் சொல்லும். மதன:- அதைக் கவனித்தே சொல்லுகிறேன். இதனால் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமான யூகங்கள் ஏற்படக்கூடியதாக இருந் தாலும், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. பா. குரோட்டன்:- நீர் தவறான நடத்தைகளில் பிரவேசிப்பவர் என்ற யூகத்தை எல்லோரும கொள்ளுமபடியாக இருந்தால், நீர் சொன்ன சாட்சியத்துக்கு மதிப்பு ஏற்படாமல் போய்விடும். அது என்னுடைய கட்சிக்காரர்களுக்கு அனுகூலமாக முடிந்து போம். அதையும் கவனித்து பதில் சொல்லும். மதன:- நான் சொன்ன சாட்சியத்துக்கு மதிப்பு ஏற்படாவிட்டால், அதைப் பற்றி நான் கொஞ்சமும் விசனப்படப் போகிறதில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களில் சொல்லக்கூடியதைச் சொல்லி விட்டேன். அதனால் யாருக்கு அநுகூலம் ஏற்பட்டாலும் ஏற்படட்டும். பா. குரோட்டன்:- சரி! உமமுடைய இஷ்டப்படியே ஆகட்டும். நீர் அந்தக் கிழவியைச சமுத்திரத்திலிருந்து எடுத்திரே; அப்போது இருளாகத் தானே இருநதது? மதன:- இல்லை; அவ்வளவு அதிகமாக இருண்டிருக்கவில்லை. மனிதரை அடையாளங் கண்டுபிடிக்க முடியாமல் மங்கலா இருந்தது? பா. குரோட்டன்:- ஒகோ! அப்படியானால் உமக்குப் பக்கத்தில் யாராவது நினறால் அவருடைய முகத்தின் அடையாளம் தெரியா தல்லவா? மதன:- ஒரு சுமார் 10-கஜ தூரத்துக்கப்பால் வருகிறவர்களுடைய முகம் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/141&oldid=853273" இலிருந்து மீள்விக்கப்பட்டது