பக்கம்:மதன கல்யாணி-3.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மதன கல்யாணி அதன் சொந்தக்காரரான சின்னையா நாயுடு என்பவருக்கும் எனக்கும் பழக்கமுண்டு. ஒரு நாள் அவர் என்னிடத்தில் பேசிக கொண்டிருந்த காலத்தில், தம்முடைய கம்பெனியில் பிடில் வாசித்து வந்த சங்கீத வித்வான் மாரடைப்பினால் இறந்து போய்விடட தாகவும், அவருடைய குழந்தைகள் இருவரையும் கவனிக்க யாரு மில்லாமையால், அவர்கள் இருவரும் அநாதைகளாக இருப்ப தாகவும் சொன்னார். நான் உடனே அந்தக் குழந்தைகளை வரவழைத்துப் பார்த்தேன். இரண்டு குழந்தைகளும் அதே மாதிரி அழகுடையவர்களாக இருந்தமையால், அந்த அநாதைக் குழந்தை களை நானே வளர்ப்பதாகச் சொல்லி வாங்கி, என்னுடைய அபிமான புத்திரனாகவும் புத்திரியாகவும் மதித்து அவர்களை வளர்த்து வருகிறேன். அந்தப் பையனே மதனகோபாலன்; அவனை நான் என்னுடைய சொந்தப் பிள்ளை போல பாவித்து வருகிறேன். அவன் வீணை வாசிப்பதில் நல்ல தேர்சசி அடைந்திருக்கிறான. சென்ற சில மாசகாலமாக, மதனகோபாலனையும் அவனுடைய தங்கையையும் இந்த ஊருக்கு அனுப்பி வைத்தேன்; ஏனென்றால், நானும் இந்த ஊருக்கே வந்துவிட உத்தேசித்து இருந்தமையாலும் அவர்களைக் கொஞ்ச காலம் பார்க்காமல் இருந்தால் என்னுடைய சொந்தக் குழந்தைகளைப் பற்றிய நினைவும் விசனமும் ஒருகால மறைந்து போகுமோ என்பதைப் பார்க்கும் பொருட்டும், அவர்களை முன்னாக அனுப்பி வைத்தேன். வந்த இடத்தில அவன், சில பெரிய மனிதர்களின் வீட்டுப் பெண்களுக்கு வீணை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதைக் கருதி, அந்த வேலையில் அமர்ந்தான். அவன் அபார ஞானமுளள வித்துவான் ஆகையால் அந்த வித்தையைப் பலருக்கும் தானம் செய்யலாம் என்ற நினைவினாலும், அதனால், தானும் அதிகக் கைதேர்ச்சியும் கீர்த்தியும் அடையலாம் என்ற எண்ணத்தினாலும், அவன் அந்த அலுவலில் அமர்ந்தானேயன்றி கேவலம் பணத்தை மாத்திரம் கருதி அதைச் செய்யவில்லை. அவன் இப்போது என்னுடைய பங்களாவிலேயே இருந்து வருகிறான்; என்னுடைய சொத்தில் பெரும் பாகத்தை நான் அவனுக்குக் கொடுக்க உத்தேசித் திருக்கிறேன். சில தினங்களாக, அவன் தேக அசெளக்கியப்பட்டுப் படுக்கையில் இருந்து குணமடைந்து வந்தான்! ஒருநாள் சாயுங்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/146&oldid=853278" இலிருந்து மீள்விக்கப்பட்டது