பக்கம்:மதன கல்யாணி-3.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 211 அதைக் கேட்ட மதனகோபாலன் மிகுந்த அதிருப்தியும் விசனமும அடைந்தவனாகத் தனது முகத்தைக் கைகளில் புதைத்த வண்ணம் கீழே குனிந்து கொண்டான். அவன் மிகவும் வருந்தி அழுகிறான் என்பதைக் கண்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார், அதற்கு மேல் அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்பதை அறிய மாட்டாமல் மோகனாங்கியின் முகத்தைப் பார்க்க, அவள் அந்தக் குறிப்பை அறிந்து கொண்டு, மதனகோபாலனை அன்போடு தடவிக் கொடுத்து, "அண்ணா! அண்ணா! உனக்கு உண்டாயிருக் கும பெருத்த பாக்கியத்தைப் பற்றி என்னிடத்தில் ஒரு வார்த்தை யாவது சந்தோஷமாகப் பேசக்கூடாதா? உன்னுடைய அம்மாளி டத்தில் நீ போய்ச் சேர்ந்த பின் எங்களை எல்லாம் மறந்து விடுவாயா? கேவலம் அநாதையான ஏழைப் பெண் நம்மை அண்ணா என்று அழைக்கலாயிற்றா என்று கோபித்துக் கொள் வாயா? அல்லது, வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசுவாயா?" எனறு மிகுந்த வாத்சல்யத்தோடும் விசனத்தோடும் கேட்க, அவளது சொற்கள் மதனகோபாலனது மனதில் சுருக்கென்று தைத்தன. மட்டுக்கடங்கா வாத்சல்யமும் அபிமானமும் அவனது உள்ளத்தில் உடனே பொங்கி எழுந்தன. அவன் மிகுந்த ஆவலோடும் ஆசையோடும் மோகனாங்கியை இழுத்துத் தனக்கருகில் உட்கார வைத்து முதுகில் தடவிக் கொடுத்து, "அம்மா! மோகனா! உன் வாயிலிருந்து இப்படிப்பட்ட கொடுமையான சொற்களும் வந்தனவா! எனக்கு எபபடிப்பட்ட சங்கநிதி பதுமநிதியே கிடைப்பதானாலும் எப்படிப்பட்ட தாயாரும் தங்கைமார்களும் வந்து வாய்ப்பதானாலும், நான் அறிவு பெற்ற முதல் இத்தனை வருஷ காலம் வரையில், உன்னை நான் எனனுடைய சொந்தத் தங்கையாக மதித்து உன்பேரில் வைத்த வாத்சல்யமும் பிரேமையும் மாறுமா? நீ என்னை அண்ணா என்று கூப்பிடாமல், வேறே விதமாகக் கூப்பிட்டால், அதைக் கேட்க என் மனம் சகிககுமா? எனக்கு எபபடிப்பட்ட பாக்கியம் கிடைத்தாலும், அதற்கு நான் உனனையும சம்பாத்தியஸ்தியாக ஆக்கியே தீருவேன என்பதை நீ உறுதியாக எண்ணலாம். உன் மனம் வருந்துமானால், நான் உடனே என் உயிரையே விட்டுவிடுவேன என்பதை நீ நிசசயமாக நம்பலாம். இப்படிப்பட்ட சந்தேகத்தை நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/214&oldid=853354" இலிருந்து மீள்விக்கப்பட்டது