பக்கம்:மதன கல்யாணி-3.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மதன கல்யாணி கண்ணே ராஜாயி! எங்கே! ஒடிவாருங்கள்! என் தேகம் பதறுகிறது! ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்ளுங்கள் உங்களை எல்லாம் எமனுக்கு ஆகாரமாகக் கொடுத்து விட்டேன் என்றும், இனி சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைத்திருந்த எனக்குப் புத்துயிர் கொடுத்த என் கண்மணிகளே வாருங்கள்!" என்று கூறி மிகவும் பதறிக் கதறி அவர்களை நோக்கி ஓடிவர, ராஜாயியும், மோகனரங்கனும், "அப்பா இப்போதாகிலும் உங்களைப் பார்க்கக் கிடைத்ததே!" என்று கூறிய வண்ணம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தங்களது தந்தையைக் கட்டித்தழுவிக் கொள்ள, மூவரும் தங்களது மனதில் காட்டாற்று வெள்ளம் போலப் பொங்கி எழுந்த குதுகலத்தையும், பேரின்ப சுகத்தையும் தாங்கமாட்டாமல் கோவெனக் கதறி வாய்விட்டலறித் தேம்பித் தேம்பிக் குழந்தைகள் போல அழுது பாகாய் உருகியோடினர். சற்றுமுன் சிவஞான முதலியார் சிகூஜிக்கப்பட்ட போது ஏற்பட்ட குழப்பத்தையும், கலகத்தையும் கண்டு, அஞ்சி நடுங்கிக் கலவர மடைந்து பக்கத்து மண்டபத்தில் நின்ற கல்யாணியம்மாள், கோமளவல்லி, மீனாகூஜியம்மாள், கண்மணியம்மாள் முதலி யோரும், நூற்றுக்கணக்கான பணிமக்களும் அங்கே வந்து கூடி, கல்லும் கரைந்துருகத் தக்கதாக இருந்த அந்தச் சந்திப்பைக் கண்டு கலங்கிக் கண்ணிர் விடுத்தழுது நைந்திளகி நின்றனர். மதனகோ பாலன் ஆனந்த சாகரத்தில் மிதந்து மயிர் சிலிர்க்க நின்று பேரின்பம் எய்தினான். அவ்வாறு அரை நாழிகை நேரம் வரையில் அந்த மண்டபத்தில் இருந்த எல்லோர் மனதிலும், ஆனந்தமே மயமாக இருந்து எல்லோரையும் மெய்ம்மறந்து போகும்படி செய்தது. தமக்கெதிரில் வந்து நின்ற கல்யாணியம்மாளைக் கண்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந் தார் தமது குழந்தைகளை விடுத்து, அந்தச் சீமாட்டியைப் பார்த்துப் புன்னகை செய்ய, உடனே கல்யாணியம்மாள், "அண்ணா! நேற்றைய தினம் எனக்குப் பங்கில்லையா என்று கேட்டீர்களே! எனக்குக் கிடைத்ததைவிட இரண்டு பங்கு ஆனந்தத்தை ஈசுவரன் தங்களுக்கு இன்றைய தினம் கொடுத்துவிட்டான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளைதானே வளரும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/253&oldid=853397" இலிருந்து மீள்விக்கப்பட்டது